ஜனாதிபதிதேர்தல் களம் சிங்களதேசியவாதம்,சிங்களபௌத்தம்,தேசியபாதுகாப்பு,ஒழுங்கமைந்தசமூகம் – இவை பாசிசத்தைநோக்கியபாதையா? பகுதி 4 . வி. சிவலிங்கம்

 

இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் என்பதுமிகமுக்கிய இரு தெரிவுகளை நோக்கிச் செல்கிறது. அதாவதுதேசியவாதம், தேசியபாதுகாப்பு, தேசியபொருளாதாரம் என்பன ஓர் இறுக்கமானகட்டுப்பாடுநிறைந்தசமூகக் கட்டுமானஉருவாக்கத்தின் பின்னணியில் உருவாக்கப்படுவதா? அல்லதுலிபரல் ஜனநாயகம்,மனிதஉரிமை,பன்மைத்துவம் என்பவற்றுடன் கூடியதாராளவாத பொருளாதாரத்தைவிருத்திசெய்வதா? என்றவரையறைக்குள் சென்றுள்ளது.

இவ்விரண்டுஅணுகுமுறைகள் குறித்தசெயற்பாட்டு அடிப்படையிலான அல்லது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலானவிளக்கங்களைப் பெற்று, இத் தேர்தலைச் சந்திப்பதுபொருத்தமானதா? என்பதைநோக்கியவிவாதங்களை இக் கட்டுரைதருகிறது.

ஏற்கெனவேகுறிப்பிட்டதுபோலசமீபகாலஅரசியல் அணுகுமுறைகள் குறிப்பாகசிறீலங்காசுதந்திரமக்கள் முன்னணி( பொதுஜன பெரமுன) சார்பில் போட்டியிடும் கோதபய ராஜபக்ஸ அவர்களின் அணுகுமுறைகள் அல்லது விளக்கங்கள்பாசிசத்தைநோக்கியபாதையாகஉள்ளதாகக் கருதுகிறோம். அந்தவகையில் பாசிசத்தின் கூறுகள் எவ்வாறு அமைந்திருக்கலாம்? அல்லதுஎவ்வாறுதோற்றம் பெறுகின்றன?எனசர்வதேசஅனுபவம் அடையாளப்படுத்தியுள்ளசிலபோக்குகளைமுதலில் குறிப்பிட்டுதற்போதையபோக்குகள் அவற்றைஎவ்வாறுஅடையாளப்படுத்துகின்றன? என்றவிளக்கத்திற்குள் செல்லலாம்.

• தேசப்பற்றுத் தொடர்பானஅம்சங்கள் அடிக்கடிவலியுறுத்தப்படுவதோடு,அவற்றைத் தொடர்ந்துமுணுமுணுக்கும் வகையில் உற்சாகமூட்டும் சொற்தொடர்கள்,பதாகைகள்,பாடல்கள்,உடைகள்,அங்கிகள்,நிறங்கள் என்பனபகிரங்கமாகவெளிப்படுத்தப்படும்.

• மனிதஉரிமைகள் பற்றிஅதிகம் அலட்டிக் கொள்வதில்லை. நாட்டிற்குஆபத்துநேர்கையில் மனிதஉரிமையைக் கைவிடுவதுதேவையாகஉள்ளது. இவ்வாறானமீறல்கள் சித்திரவதை, கூட்டுக் கொலை, இரகசியபடுகொலைகள்,நீண்டகாலம் சிறையிலடைத்தல் போன்றனநடைபெறின் மக்கள் அவற்றைத் தேசத்தின் நலன் கருதிஅலட்சியம் செய்தல் வேண்டும்.

• எதிரியைஅல்லதுதுரோகியைஅல்லதுதேசியநலனுக்குஆபத்தானவர் எனக் கருதினால் அவரைஅடையாளம் காட்டுவதுதேசியஐக்கியத்தைப் பேணுவதற்குஅவசியமானது. இவ்வாறானவர்களைஅப்புறப்படுத்துவதைமக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

• ராணுவம் என்பதுசமூகத்தின் உயர்ந்த இடத்தில் உள்ளதுஎன்பதைஏற்றுக்கொள்ளவேண்டும். நாடுபொருளாதாரத்தில் மிகவும் மோசமானநிலையில் காணப்பட்டாலும்,ராணுவத்திற்குவிகிதாசாரத்திற்குஅப்பால் நிதிஒதுக்கீடுசெய்தல் அவசியம். உள்நாட்டுத் தேவைகளைப் புறக்கணித்தாவதுஅவைநிறைவேற்றப்படவேண்டும். ராணுவசேவைஎன்பதுநாட்டின் மிகஉயர்ந்தகௌரவம் என்பதுஅடிக்கடிஉணர்த்தப்படும்.

• பாசிசம் எப்போதுமேஆண்பால் பற்றியபெருமைகளைப் போற்றுவதோடு,பால் தொடர்பானசமூகபாரம்பரியங்களைப் புறக்கணிக்கும்படிகோரும்.

• ஊடகங்கள் மீதுஅதிககண்காணிப்புஅல்லது,நண்பர்கள் அல்லதுஒத்தகருத்துள்ளவர்களைநியமித்தல்,தணிக்கைஎன்பனசெயற்பாடுகளாகஅமையும்.

• பாதுகாப்புஎன்பதுகுறித்துமிகவும் பரபரப்பாகப் பேசப்படும். தேசியஆபத்துநிறைந்துள்ளதாகஅல்லதுஅண்மித்துள்ளதாகக் கூறிமக்களைஅணிதிரட்டுவதுசெயற்பாடாகஅமையும்.

• நாட்டின் அரசகட்டுமானத்திற்கும்,மதகட்டமைப்புகளுக்குமிடையேநெருக்கமானஐக்கியம் காணப்படும். மதம் என்பதுநாட்டுமக்களின் அபிப்பிராயத்தைமாற்றுவதற்கான ஓர் கருவியாகும். மதஉரையாடல்கள்,சொற் பிரயோகங்கள் என்பனஅரசபாவனைக்கும்,மதங்களுக்குமிடையேஅதிக இடைவெளிகள் காணப்படமாட்டா. மதக் கோட்பாடுகளுக்கும்,அரசசெயற்பாடுகளுக்குமிடையேபலத்தவேறுபாடுகள் காணப்பட்டாலும் அவைவெளிப்படமாட்டா.

• உயர் வர்த்தகஅல்லதுபல்தேசியநிறுவனங்களுடனானஉறவுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். தொழிற்துறையைஅல்லதுவர்த்தகத்துறையைக் கட்டுப்படுத்துபவர்கள் ஆட்சியாளர்களின் நண்பர்கள்,உறவினர்கள் என்பதால்,அவர்களே இப் பாசிசப் போக்கினால் பெரும் பலனடைவதால் உறவுகள் பலமாக,நெருக்கமாகஇருக்கும்.

• தொழிலாளர் உரிமையைநசுக்குவதற்கானவாய்ப்புகள் அதிகம் காணப்படும். ஏனெனில் தொழிலாளர் அமைப்புகளேபாசிசப் போக்கிற்குஎதிராகசெயற்படும் கட்டமைப்பைக் கொண்டிருப்பவர்கள்.இதனால் தொழிற்சங்கங்கள் முற்றாகநசுக்கப்படும் அல்லதுகடுமையாகஒடுக்கப்படும்.

• கல்வியாளர்கள்,அறிஞர்கள்,கலைஞர்கள்என்போர் ஏளனப்படுத்தப்படுவார்கள். உயர் கல்வி,உயர் கல்விப் பீடம்என்பவற்றைவளர்ப்பதில் அதிகஉற்சாகம் காட்டப்படுவதில்லை.இக் கல்வியாளர்கள்,கலைஞர்கள்,பேராசிரியர்கள் என்போரேமுதலில் சிறையிலடைக்கப்படுவார்கள். கலைஞர்கள் சுதந்திரமாககருத்துக்களைவெளியிடுவதுபகிரங்கமாகஎதிர்க்கப்படுவதோடு,அதன் வளர்ச்சிக்கானநிதியுதவிகளும் மறுக்கப்படும்.

• குற்றமும்,தண்டனையும் குறித்துபெரும் தயக்கம் காட்டப்படும். பொலீசாருக்குவரையறையற்றஅதிகாரம் காணப்படும். பொலீசாரின் அத்துமீறல்களைமக்கள் தடுக்காதுவேடிக்கைபார்ப்பார்கள். தங்களதுசிவில் உரிமைகளைக்கூட தேசபிமானத்தின் பெயரால் விட்டுக் கொடுப்பார்கள். பாசிசஆட்சியின் கீழ் ராணுவம்,பொலீசாருக்குஅத்துமீறியஅதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும்.

• குடும்பஆட்சியும்,ஊழலும் மிகையாகக் காணப்படும். ஏனெனில் பாசிசஆட்சியானதுநண்பர்கள்,உறவினர்கள்,ஆதரவாளர்கள் என்போரின் கூட்டுக் கலவையாகும். அவர்களேமாறிமாறிஅதிகாரங்களில் உட்காருவதும்,குற்றம் புரிந்தோரைஅதிகாரத்தைப் பயன்படுத்திபொறுப்புக் கூறலிலிருந்துகாப்பாற்றுவதும் நடைபெறும். இப் பாசிசசக்திகள் தேசத்தின் வளங்களைத் தம்மிடையேபங்கீடுசெய்வதும்,தேசத்தின் விலைமதிப்பற்றபொக்கிஷங்களைவெளிப்படையாகத் திருடுவதும் நடைபெறும்.

• தேர்தல் மோசடிகள் அப்பட்டமாகநடந்தேறும். தேர்தலில் எதிரணிகள் மிகமோசமாகநடத்தப்படுவார்கள். அவதூறுக்குஆளாக்கப்படுவார்கள். படுகொலைகளும் நிகழலாம்.

• சட்டத்தினைப் பயன்படுத்திதேர்தல் வாக்குகளின் எண்ணிக்கையில் மோசடி,தேர்தல் எல்லைகளைவகுப்பதில் சதி,ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதுஎன்பனநடந்தேறும்.

• நீதித்துறையின் முடிவுகளைமாற்றுவதுஅல்லதுநீதித்துறையைப் பயமுறுத்திபணியவைத்து,எதிர்பார்த்தமுடிவுகளைஎட்டுவது.

வாசகர்களே!
மேற்குறிப்பிட்டபிரதானஅம்சங்கள் பாசிசஆட்சிதோற்றுவதற்கானஆரம்பஅடையாளங்களாகஅல்லதுஅறிகுறிகளாகவரலாற்றின் முடிவிலிருந்துபெறப்பட்டஅனுபவங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைஅடிப்படையாகமுன்வைத்து இலங்கையின் அரசியலில் காணப்படும் பாசிசஅம்சங்களைவாசகர்கள் புரிந்துகொள்ளலாம். இருப்பினும் இவ் அம்சங்கள் ஓர் நல்லாட்சியைஏற்படுத்துவதற்கானஅடிப்படைகளாகஅமையலாம் எனவும்,தொடர்ச்சியாகநிலையற்றஆட்சி,பலவீனமானகட்சிஆட்சிமுறை,கட்சித் தாவல்கள்,ஜனநாயககாரணங்களைப் பயன்படுத்திசிறுகட்சிகள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறாகஅல்லதுபெரும்பான்மைக் கட்சிகளின் செயற்பாடுகளுக்குத் தடையாகஅமைதல்,பயங்கரவாதசெயற்பாடுகளைப் பாராளுமன்றகட்சிஆட்சிமுறையால் கட்டுப்படுத்தமுடியாதநிலமைகள் போன்றனவும் ஓர் கட்டுப்பாட்டைவலியுறுத்திச் செல்வதால் எதிர்காலநன்மைகருதிசிலசமயம் ஜனநாயகத்தின் சிலஅம்சங்களைத்தற்காலிகமாகவிட்டுக் கொடுப்பதில் தவறில்லைஎனவும் விவாதிக்கப்படுகிறது.

இவ் விவாதங்களில் அர்த்தம் காணப்பட்டபோதிலும் மேற்குறிப்பிட்டநோக்கங்களில் மறைமுகஉள் நோக்கங்கள் இருப்பதைகடந்தகாலசெயற்பாடுகள் உணர்த்தியுள்ளன. அவை 2015ம் ஆண்டிற்குமுன்பதானஅல்லது 2015 இல் மக்களால் நிராகரிக்கப்பட்டகாரணிகளைமீண்டும் முன்னெடுப்பதற்கானமுயற்சிகளாகவேதற்போதையநிகழ்வுகள் காணப்படுகின்றன. அவ்வாறில்லையெனில் முன்னையஆட்சியாளர்களின் செயற்பாடுகள் ஜனநாயகத்தின் அடிப்படைகள் ஆட்டம் காணப்படும்போதுஅவற்றைத் தடுக்க இந்தஆட்சியாளர்கள் முயற்சிக்காததுமட்டுமல்லஅவர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அவைகுறித்துச் சற்றுநோக்கலாம்.

சிங்களபௌத்ததேசியவாதிகள் இலங்கைஎன்பதுபௌத்தநாடுஎனவற்புறுத்துகிறார்களேதவிர ஏனைய இனங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். அரசுஎன்பதுசிங்களபௌத்ததேசியவாதத்திற்குப்பணிந்துசெயற்படவேண்டும் எனவும்,ராணுவத்தைமிகவும் புகழ்ந்துபேசிநாட்டில் வாழும் தனிநபர்கள் அதில் காணாமல் போய்விடுகிறார்கள். சகலரும் தேசியவாதத்தின் மேன்மையைநம்புதல்,கீழ்ப்படிதல்,போராடுதல் என்றபடிகளுக்குள் செல்லநிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பௌத்தபிக்குகள் மத்தியில் அதிதீவிரவாதம் பலமடைந்துஅவை இதரதேசிய இனங்களுக்குஎதிராக,உரிமைகளைமறுதலிப்பதாகஉள்ளன. ‘பொதுபலசேன’என்றபிக்குகள் முன்னணியின் தலைவர் சிறுபான்மை இனங்களுக்குஎதிராகசிங்களபௌத்ததீவிரவாதத்திற்குமக்களைப் பகிரங்கமாகத்திருப்புகிறார்.

‘ இந்தஅரசுசிங்களமக்களால் சிங்களபௌத்தர்களுக்காக,உருவாக்கப்பட்டது. இதுசிங்களநாடு,சிங்களஅரசாங்கம். ஜனநாயக,பன்மைத்துவகோட்பாடுகள் சிங்கள இனத்தைஅழிக்கின்றன.’எனஆர்ப்பரிக்கிறார்.

சிறுபான்மை இனங்களின் வாக்குகளால் பெரும்பான்மை இனத்தின் அபிலாஷைகள் மாற்றப்படுவதாகமுறையிடுகின்றனர். சிங்களமக்களின் புனிதவாக்குகளைக் காப்பாற்றஏற்பாடுகளைமேற்கொள்ளுமாறு கூறுகிறார். முஸ்லீம் மக்களின் ஆடைகளை‘கொரில்லாக்கள்’எனவிபரித்துஅவமானப்படுத்துகிறார். ஆண்களின் ரி சேட்டுக்களில் ( வு ளூசைவ )‘கலால் அற்றது’எனஅச்சடித்துமுஸ்லீம் மக்களின் உணவுமுறைஏளனப்படுத்தப்படுகிறது.

இப் பிரச்சனையில் மகாசங்கங்கள் நடந்துகொள்ளும் முறைவியப்பைஅளிக்கிறது. தேர்தலில் மக்களிடம் ஆணைபெற்றகாரணத்தால் புதியஅரசியல் யாப்புமுயற்சிகளைஅரசாங்கம் எடுத்தது. ஆனால் புதியஅரசியல் யாப்புதற்போதுதேவையில்லைஎனவும்,அவ்வாறுமாற்றப்படும்போதுபௌத்தமதத்திற்குவழங்கப்பட்டமுதலிடம் இல்லாமல் போகும் ஆபத்துகள் உண்டுஎனவும்,நாட்டின் ஒற்றைஆட்சித் தன்மைமாற்றப்படலாம் எனவும்,நிறைவேற்றுஅதிகார ஜனாதிபதிஆட்சிமுறைமாற்றப்படக்கூடாதுஎனவும் தெரிவித்துதமதுஎதிர்ப்பைவெளியிட்டிருந்தனர்.

மக்களால் தெரிவுசெய்யப்படாத இந்தஅமைப்புகள் மக்களின் முடிவுகளைமாற்றமுடியுமெனில் நாட்டில் அரசியலமைப்புஆட்சிமுறை,பாராளுமன்றம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புஎன்றநிலைக்குச் சென்றுவிடும். இவ்வாறுபௌத்தநிறுவனங்கள் தேசியஅரசியல் வாழ்வைமாற்றும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதுபாசிசதோற்றப்பாடாகவேஉள்ளது. இத்தகையமுயற்சிகள் நாட்டின் பல்லினத் தன்மையைநிராகரித்துஒரு இனத்தின் ஆதிக்கத்திற்குமாற்றுவதற்கானநடைமுறையாகும்.

நாட்டின் ஜனநாயகஆட்சிக் கட்டுமானத்தில் பௌத்தமதமேலாதிக்கம் காணப்படுமானால் அரசுஎன்பது இறைமைஅதிகாரம் கொண்டுள்ளதுஎனக் கூறுவதுஅர்த்தமற்றது. இதுநாட்டின் ஜனநாயகவழிமுறைக்குஒவ்வாததுமட்டுமல்ல,பெரும்பான்மைச் சமூகத்தினர் அதனால் ஏற்படக்கூடியஆபத்துக்களைஅலட்சியப்படுத்துவதாகவும் கொள்ளவேண்டும். இதுஆட்சிக்கும்,பிரஜைகளுக்குமிடையேயான இணைப்பைத் துண்டிக்கிறது. பாசிசம் தலைதூக்க வழி சமைக்கிறது.

பாராளுமன்ற இறைமைஅதிகாரத்தில் பௌத்தமதநிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்துகாணப்படுவதுஅரசிற்குள் இன்னொருஅரசுசெயற்படுவதாகவேஉள்ளது. இப் பிரச்சனையில் பிரதானசிங்களக் கட்சிகள் மத்தியில் அதிகவேறுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லமகாசங்கங்களின் தலையீடுமிகஆபத்தானதுஎனத் தெரிந்திருந்தும் அதிகாரவர்க்கத்தினர் அவைபற்றிமௌனமாக இருப்பதுமிகமோசமானதாகும்.

அரசியல் அமைப்புபௌத்தமதத்திற்குமுதலிடம் வழங்குவதுஎனத் தெரிவிப்பதுபௌத்தமகாசங்கங்களின் தலையீட்டிற்குஏற்கெனவேவழி வகுத்துள்ளது. நாட்டில் சுமார் 30,000 பௌத்தபிக்குகளும்,சுமார் 14 மில்லியன் பௌத்தர்களும் உள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்வாறெனில் மிகவும் சொற்பதொகையுள்ளபிக்குபிரிவினர் நாட்டின் ஒட்டுமொத்தபௌத்தர்களின் அபிப்பிராயங்களைவெளிப்படுத்துவதாககொள்ளமுடியுமா? மகாசங்கத்திற்குள் சாதிவேறுபாடுகள் அதிகம் உள்ளன. போட்டிகள் உள்ளன.

நாட்டில் தேசிய இனப் பிரச்சனைநாட்டின் எதிர்காலத்தைத் தொடர்ந்துபாழ்படுத்திவருகிறது. குற்றச் செயல்கள்,கொள்ளை,போதைப் பொருள் பாவனை,குடிவகைஅதிகரிப்பு,பெண்கள்,சிறுவர் மீதானகொடுமைகள் போன்றனதொடர்கின்றன. இதன் காரணமாகபௌத்தமதம் தெரிவிக்கும் விழுமியங்கள் அம் மக்களிடையேமறைந்துசெல்கின்றன. இவ் ஆபத்தினைத் தடுக்கபௌத்தமதநிறுவனங்கள் ஏதாவதுபயனுள்ளவற்றைமேற்கொள்ளமுடியும்.

நாடுநவதாராளவாதபொருளாதாரக் கொள்கையைஅமுல்படுத்துவதால் தேசியபிரச்சனைகளில் வெளிநாட்டுத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தடையற்ற இறக்குமதிகாரணமாகநாட்டின் கலாச்சாரவாழ்வைச் சீரழிக்கும் வகையில் திரைப்படங்கள்,நாடகங்கள், இலக்கியங்கள்,குடிவகைகள் எனப் பலநாட்டிற்குள் நுழைந்துள்ளன. இவற்றினால் ஏற்படக்கூடியஆபத்துக்களை இவர்கள் மக்களிடம் ஏன் பேசுவதில்லை?

காணாமலாக்கப்பட்டோர்,அல்லதுகாணாமலாக்கப்படுவோர் பாதுகாப்புத் தொடர்பாக ஐ நா இல் அங்கம் வகிக்கும் நாடுகள் சட்டங்கள் இயற்றவேண்டும் என்பதற்கிணங்கஅரசுசட்டங்களை இயற்றஎத்தனித்தபோதுமகாநாயக்கர்கள் எதிர்த்தனர். இதனால் அரசுசட்டமூலத்தைவாபஸ் வாங்கியது.

கடந்த 20- 06- 2017 இல் அஸ்கிரியமகாநாயக்கர்கடிதம் ஒன்றைஅரசிற்குஅனுப்பியிருந்தது. அதில்
— பலரும் அறிந்தபடிபௌத்தபிக்குகள் எமதுதாய் நாட்டின் பாதுகாப்பிற்குஅல்லதுசிங்களதேசத்திற்குஅல்லதுபௌத்தசாசனத்திற்குஆபத்துஏற்படின் தமதுஉயிரைஅர்ப்ணிக்கத் தயாராகஉள்ளனர் என்பதைஅறிவீர்கள்——-

என அக் கடிதம் ஆரம்பிக்கிறது. அக் கடிதத்தில் குறிப்பிடப்படும் எங்கள் தாய் நாடு,சிங்களதேசம்,பௌத்தசாசனம் என்பதுபௌத்தமதக் கோட்பாடுகளாகக் கொள்வதா? அல்லதுஅரசியல் முடிவுகளைநோக்கியதா?
பொதுபலசேனவின் தலைவர் ஞானசாரதேரரின் செயற்பாடுகள் குறித்துதெரிவிக்கையில்
— வண. ஞானசாரதேரர் உணர்ச்சிவசப்பட்டுகடுமையானதொனியில் தெரிவிக்கும் கருத்துக்களைநாம் ஏற்றுக்கொள்ளாவிடினும்,அதனுள் புதைந்துள்ளகோட்பாடுகளைஅலட்சியப்படுத்தமுடியாது—-

பொதுபலசேனகுறித்துபௌத்தபீடங்கள் என்னகருதுகின்றன?அதாவதுஅவர் வெளிப்படுத்தும் முறைபாரதூரமானதுஅல்லஎன்பதும்,அதனுள் காணப்படும் கோட்பாடுமுக்கியமானதுஎனத் தெரிவிப்பதன் மூலம் அவரதுசெயற்பாடுகளைமறுதலிக்கஅவர்கள் தயாராக இல்லைஎன்பதும் தெரிகிறது. எனவேமதசக்திகளும்,அரசியல் சக்திகளும் பொதுபலசேனவிடயத்தில் ஒருமித்தேசெயற்படுகின்றன.

ஒருமுறைநாட்டின் ஜனாதிபதியானமகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும்,பௌத்தசாசனஅமைச்சர் ராஜபக்ஸ ஆகியோரைநோக்கிநாட்டின் மதநல்லிணக்கத்தைபேணஉதவும்படிபிரபலசமூகசெயற்பாட்டாளர்களானதம்புரஅமலதேரர்,பேராசிரியர் பேரின்பநாயகம் போன்ற 173 பேர் ஒப்பமிட்டுக் கடிதம் எழுதியிருந்தனர்.

அக் கடிதம் குறித்தகேள்வியின்போதுபௌத்தசாசனஅமைச்சர் ராஜபக்ஸஒப்பமிட்டவர்கள் அங்கொடைமனநோயாளர் வைத்தியசாலைக்குஅனுப்பப்படவேண்டுமெனத் தெரிவித்திருந்தார். இந்தஅமைச்சரேநாட்டில் ஜனநாயகம்,நல்லாட்சி,சுதந்திரபேச்சுரிமைஎன்பவற்றைப் பாதுகாப்பதாகக் கூறுபவர்.

வாசகர்களே!
தேர்தல்கள் வரலாம் அல்லதுபோகலாம். ஆனால் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டஅரசியல்,சமூகமாற்றங்கள் தொடரப் போகின்றன. அவைமுடிவடைவதில்லை. எனவேமாற்றங்களுக்காக,நீதிக்காகநாம் தொடர்ந்துகிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் பயன்படுத்திப் போராடவேண்டும். இதற்காகவேசமூகஅல்லதுசிவில் அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள்,அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுகின்றன.

எமதுஅரசியல் தொலைநோக்கு, இயக்கம்,புரட்சிகரஎண்ணங்கள் நிறைவேறவேண்டுமெனில் நான்குசுவர்களுக்குள் அல்லதுபணங்களைக் கொட்டிமாற்றத்தைஏற்படுத்தமுடியாது. மக்கள் தாமாகவே‘போதும்,போதும்’எனக் கூறும் நிலைஏற்பட்டுநீதிக்காகப் போராடவேண்டும்.

இதுவரைபொதுஜன பெரமுனசார்பில் கோதபய ராஜபக்ஜ அவர்களின் அரசியலின் எதிர்காலம் எவ்வாறுஅமையலாம்? எனப் பார்த்தோம். இனி ஐ தே கட்சிசார்பில் போட்டியிடும் சஜீத் பிரேமதாஸ அவர்களின் அரசியற் கோட்பாடுகள்,செயற்பாடுகளின் எதிர்காலம் குறித்துப் பார்க்கலாம்.
( தொடரும் )

Author: theneeweb