ஜனாதிபதிதேர்தல் களம் சிங்களதேசியவாதம்,சிங்களபௌத்தம்,தேசியபாதுகாப்பு,ஒழுங்கமைந்தசமூகம் – இவை பாசிசத்தைநோக்கியபாதையா? பகுதி 3 – வி. சிவலிங்கம்

 

எதிர்வரும் 16-11-2019 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமானஅரசியல் பின்னணியில் இடம்பெறவுள்ளது. 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது 2005 – 2015 வரையானமகிந்தஆட்சிக் காலத்தின் பெறுபேறுகளைஉணர்த்தியது. இதன் காரணமாக நல்லாட்சிஅரசுஎன்றபோர்வையில் மைத்திரி–ரணில் அரசுகடந்த 5 வருடங்களைக் கடத்தியுள்ளது.
2015ம் ஆண்டுதேர்தலில் தேசிய nபொருளாதாரவளர்ச்சி, தேசியநல்லிணக்கம்,புதியஅரசியல் யாப்பு எனப்பலவாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதிலும் அவைமுற்றாகநிறைவேற்றப்படவில்லை. ஆனாலும் மேற்குறிப்பிட்டமாற்றங்களைமுன்னிறுத்தியமைக்கானகாரணங்கள் மிகமுக்கியமானவை.
தேசியபொருளாதாரவளர்ச்சிஎன்பதுவெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு,அரசசெலவினங்களின் அதிகரிப்பு, ஊழல்,விரயம் என்பவற்றாலும்,புதியஅரசியல் யாப்பின் தேவைஎன்பதுஅரசியல் அமைப்பின் 18வது திருத்தம் சர்வாதிகாரத்தைநோக்கியபாதையைவகுப்பதாகவும், குழுமற்றும் குடும்பஆதிக்கம் பலம் பெற்றுவந்ததாலும்,ராணுவவாதம் என்பதுபயங்கரவாதத்தைஒழித்தல் என்றபோர்வையில் ஆட்சியின் வழிமுறையாகவும்,நிறைவேற்று ஜனாதிபதிஆட்சிமுறைஎன்பதுசர்வாதிகாரியைஉருவாக்கும் நிலையில் காணப்பட்டதாலும்,தேசியநல்லிணக்கம் என்பதுமிகவும் மோசமானநிலைக்குத் தள்ளப்பட்டுதேசிய இனங்களிடையே பகை உணர்வுகள் வளர்ந்துதேசியஅமைதி,சமாதானம் என்பது எட்டமுடியாதநிலைக்குச் சென்றதால் சர்வதேசதலையீடுகாணப்பட்டநிலையில் நாடுமோசமானநிலைக்குச் சென்றகாரணத்தால் மக்கள் மாற்றுஅரசுஒன்றினைநிறுவும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஆனாலும், 2015ம் ஆண்டில் நிறுவப்பட்டமைத்திரி–ரணில் அரசினாலும் கொடுத்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதநிலையில் 2019ம் ஆண்டின் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2015- 2019ம் ஆண்டுகாலத்தில் செயற்பட்டமைத்திரி–ரணில் அரசின் பலவீனங்கள் காரணமாக அக் கட்சிகள் தற்போதுபலவீனமானநிலையில் தேர்தலைஎதிர்நோக்கியுள்ளன. அதேவேளை 2015ம் ஆண்டில் மக்களால் தோற்கடிக்கப்பட்டஅதேசக்திகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றமுயற்சிக்கின்றன.
எனவேமகிந்தஆட்சிக் காலம்,ரணில் ஆட்சிக் காலம் ஆகியவற்றின் அனுபவங்களைஅடிப்படையாகவைத்தேஇன்றையதேர்தலைநோக்கவேண்டியுள்ளது. தற்போதையதேர்தல் பின்னணிஎன்பதுமுற்றிலும் மாறுபட்டசூழலில் நடைபெறுவதால் கடந்தகாலங்களைப் பற்றிப் பேசிக்காலத்தைவிரயமாக்காமல் எதிர்வரும் காலம் எவ்வாறுஅமையலாம்? என்பதுகுறித்துவிவாதத்தைநகர்த்துவதுபொருத்தமானதுஎன்றவாதங்களும் உள்ளன.
நிகழ்காலம் என்பதுபுதிதானஒன்றுஅல்ல. ஏற்கெனவேஅமைந்துள்ளகட்டுமானங்கள்,ஒழுங்குமுறைகள்,கோட்பாட்டுமுறைகள்என்பவற்றிலிருந்தேஅதாவதுகடந்தகாலத்தின் தொடர்ச்சியாகவேஅவைஅமையமுடியும்.அமைந்துள்ளன. அதுமட்டுமல்ல,தேசியஅரசுக் கட்டுமானம் என்பது ஓர் குறிப்பிட்டபாதையில் நகரஆரம்பித்தல் என்பதுஅரசில் அமைந்துள்ளகட்சிஅல்லதுகட்சிகள்,நாட்டின் எதிர்காலம் எவ்வாறுஅமையவேண்டும்? என்றதீர்மானத்திலிருந்தேதொடங்குகிறது. 2009ம் ஆண்டின் பின்னர் அமைந்தமகிந்தஅரசுபோரின் வெற்றியின் பெறுபேறுகள், அப் போரைவெற்றிக்குஎடுத்துச் சென்றசக்திகளின் எதிர்பார்ப்புகள், இலங்கைத் தேசியத்தைவரையறுக்கும் பொறிமுறை,மகிந்தசிந்தனைஎன்றகோட்பாட்டின் உள்ளார்ந்தநோக்கங்கள்போன்றபலஅம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
உதாரணமாக, 2005 – 2015ம் ஆண்டுகாலப் பகுதியில் சிங்களபௌத்ததேசியவாதம் மிகவும் பலமடைந்துள்ளது. இலங்கைபௌத்தர்களின் தேசம் என்பதுபலமாகஉரைக்கப்பட்டு,நாட்டின் பல்லினத் தன்மை,பன்மைத்துவம் என்பனமறைக்கப்பட்டுவருகிறது. தேசத்தின் பொருளாதாரம் என்பதுமுற்றிலுமாகவெளிநாட்டுக் கடன்களில் தங்கிவாழும் நிலைகாணப்பட்டுவருகிறது. தேசிய மூலவளங்களைஅந்நியர்களிடம் கையளித்தேதேசியக் கடன்களைஅடைக்கும் நிலைஉருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பூகோளநலன்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் வலைக்குள் இலங்கைசிக்கியுள்ளது.
தேசிய இனப் பிரச்சனைஎன்பதுமுழுமையாகமறைக்கப்பட்டுபயங்கரவாதம் என்றவரையறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு,தேசிய இனங்களின் ஜனநாயகஉரிமைகளுக்கானகுரல்கள் என்பதுவெளிநாட்டுசக்திகளின் சூழ்ச்சிக் குரல் எனஅடையாளப்படுத்தப்படுகிறது. தேசிய இனங்களின் ஜனநாயகக் குரல் என்பதுதேசவிரோதசக்திகளின் கூடாரமாகமாறிதேசியபாதுகாப்புபெரும் ஆபத்தில் உள்ளதாகவிவாதிக்கப்படுகிறது. வருமானப் பற்றாக்குறைகாரணமாகபோராடநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதொழிலாளர்கள் தேசியவளர்ச்சிக்கு இடையூறுவிழைவிப்பவர்கள் எனவர்ணிக்கப்படுகிறது. தேசியஅரசுக் கட்டுமானங்களில் குறிப்பாகசிவிலியன்கள் செயற்படும் நிர்வாகங்களில் முன்னாள், இன்னாள் ராணுவத்தினர் அமர்த்தப்படுகின்றனர்.
இத்தகையசெயற்பாடுகள் ஒருகட்சிக்கோஅல்லதுஒருகுழுவினருக்கோஉரித்தானதாக இல்லை. மகிந்தஆட்சிக் காலத்தின் ஊழல் குற்றங்களைமுன்வைத்தே ஐ தே கட்சியினர் 2015ம் ஆண்டில் ஆட்சிஅமைத்தார்கள். குற்றம் இழைத்தோரைநீதிமன்றத்தில் நிறுத்துவதாகமக்களுக்குவாக்களித்தார்கள். ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதாகவரலாறு இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் எதிரணியில் இருப்பவர்களுக்குமிடையேஇப் பிரச்சனையில் தெளிவான இணக்கம் இருப்பதைஅனுபவங்கள் உணர்த்துகின்றன.
இவ் வரலாற்றுப் பின்னணியிலிருந்தே இத் தேர்தலைநோக்கவேண்டியநிலைஏற்பட்டிருக்கிறது. ஆட்சியைமாற்றுவதால் மாற்றங்கள் ஏற்படலாம் என்றநம்பிக்கைஅற்றநிலையேமக்களிடம் காணப்படுகிறது. அவ்வாறானால் எவற்றைஅடிப்படையாகவைத்து இத் தேர்தலைநோக்குவது?என்றகேள்விகள் எழுகின்றன.
கடந்த 30 ஆண்டுகாலப் போரும்,அதன் பின்னதானமகிந்த,ரணில் ஆட்சிக் காலமும் மக்களின் ஜனநாயகஉரிமைகளைமதிப்பதில் கொடுத்தமுக்கியத்தவம் என்ன? அதேவேளைஊழலற்ற,சட்டமும்,ஒழுங்கும் பேணும் நல்லாட்சியைத் தருவதாக ஐ தே இனரும் மக்களுக்குவாக்குறுதிஅளித்தனர். இவற்றின் சாராம்சமே இன்றையதேர்தலுக்கானஉரைகல்லாகஉள்ளது.ஏனெனில் நாட்டில் மக்கள் சுயமாகசெயற்படவும்,தமதுவாழ்வுத் தேவைகளைத் தலையீடு இல்லாமல் நிறைவேற்றவும்,அம் மக்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்தவும்,தேசியபொருளாதாரத்தின் உற்பத்தியிலும்,விநியோகத்திலும் நியாயமானபங்கீட்டைவழங்குவதைஅரசுஉறுதிசெய்வதையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போதையபிரச்சாரங்கள் நாட்டுமக்களின் எதிர்பார்ப்பினைநிறைவேற்றுவதாகஅமைகிறதா? அல்லதுஅதிகாரத்திலும்,பொருளாதாரத்திலும் பூரணகட்டுப்பாட்டைநோக்கியபாதைகளைநோக்கியஇலக்குகள்முன்வைக்கப்படுகிறதா? என்பதைநோக்கியேநாம் செல்லவேண்டியுள்ளது.உதாரணமாகநாட்டின் தேசியஅடையாளம்,தேசியக் கட்டுமானம்,தேசியபொருளாதாரம்,தேசியபாதுகாப்புஎன்பவைதொடர்பாக ஐ தே கட்சி,சிறீலங்காசுதந்திரபொதுஜன பெரமுனபோன்றபிரதானகட்சிகளின் வேட்பாளர் மத்தியில்பாரியவேறுபாடுகள்,முரண்பட்டவிளக்கங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாகபொதுஜன பெரமுனசார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோதபய ராஜபக்ஸ அவர்களின் கொள்கைகள்,விளக்கங்கள் என்பனபாரியபிரச்சனைக்குரியஅம்சங்களாகமாறியுள்ளன. 2005 – 2015 ஆண்டுகாலத்தில் அவரதுஅண்ணர் நாட்டின் ஜனாதிபதியாகவும், இன்னொருசகோதரர் பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும், இன்னொருசகோதரர் தேசத்தின் பொருளாதாரத்திற்கும்,கோதபயநாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவும் ஒரேகுடும்பத்தைச் சார்ந்தநால்வர் அரசின் முக்கியபதவிகளில் இருந்தனர். போர் முடிந்தபின்னர் நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதருவதாகக் கூறியஅவர்கள் மேற்கொண்டநடிவடிக்கைகள் நாட்டில் பெரும் அவலங்களைஏற்படுத்தின. மூன்றாவதுதடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றஎண்ணியஅவர் அரசியல் சாசனத்தில் 18வது திருத்தத்தைமேற்கொண்டுதேர்தலில் குதித்தார். அதன் காரணமாகவே2015 இல் அவர்களதுகட்சியிலிருந்துபிரிந்தஒருவரேமகிந்தவைத் தோற்கடித்தார்.
ஓரேகுடும்பத்தைச் சார்ந்தவர்கள்,அவர்களதுகுடும்பத்தினர் என்போர் அரசின் உயர் பதவிகளைக் கட்டுப்படுத்தியநிலையில் இடம்பெற்றசம்பவங்களுக்குஅல்லதுவெளிப்படுத்தியகொள்கைகளுக்கும்,செயற்பாடுகளுக்குமிடையேஏற்பட்ட இடைவெளிக்குப் பதிலளிக்கவேண்டியநிலையில் உள்ளனர்.
ஒருவேளை 2015ம் தேர்தலில் மக்கள் அதற்கானதண்டனையைவழங்கிவிட்டார்கள் எனசிலர் வாதிக்கலாம். ஆனால் 2015ம் ஆணடுமுதல் இற்றைவரை ஜனநாயகஅடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டஅரசைநிம்மதியாகசெயற்பட கூட்டுஎதிரணிஎன்றபெயரில் பாராளுமன்றநடவடிக்கைகளைபலவேறுமுயற்சிகளின் மூலம் தடைசெய்தனர். 2018ம் ஆண்டுஅக்டோபர் மாதம் அரசியல் அமைப்பிற்குவிரோதமானமுறையில் ஆட்சியைமாற்றஎத்தனித்தனர். இத் தேர்தலிலும் அதேபிரமுகர்களேஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்றமுயற்சிக்கின்றனர். எனவே இவர்கள் ஜனநாயகத்தின் மீதும்,குடியரசுஆட்சிக் கோட்பாடுகள் மீதம் கொண்டுள்ளநம்பிக்கைபலத்தசந்தேகங்களைஎழுப்புகிறது.
எனவேகடந்தகாலஅரசியற் கோட்பாடுகளுக்கும்,செயற்பாடுகளுக்கும், இன்றையகோட்பாடுகளுக்குமிடையேஉள்ளவேறுபாடுகளைவிளக்கஅவர்கள் கடமைப்பட்டுள்ளனர். தற்போதையபிரச்சாரங்களும்,விளக்கங்களும் கடந்தகாலநடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவேகருதப்படுகிறது. அதாவதுகடந்தகாலஅரசியற் போக்குகள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகச் செயற்பாடுகளைமுடக்கிதனிநபர் சர்வாதிகாரத்தைஅல்லதுபாசிசஅரசிற்கானஅடிப்படைகளைத் தோற்றுவிக்கஎத்தனிக்கப்பட்டதாகக்கருதப்படுகிறது. தற்போதுதேசியக் கட்டுமானம்,தேசியபொருளாதாரம்,தேசியபாதுகாப்புஎன்பதுகுறித்துஅளிக்கப்படும் விளக்கங்கள் பலவிதசந்தேகங்களைஅதாவதுபாசிசஅரசிற்கானதோற்றப்பாடுகளைத் தருவதாகக்கருதவேண்டிஉள்ளது.
உதாரணமாகபோர்க்காலஅரசியலிற்கும்,சமாதானகாலத்திற்குமிடையேமுன்வைக்கப்படும் அரசியல் அணுகுமுறைகளில் பாரியவேறுபாடுகள் இல்லை. போரைநடத்துவதற்குப் பலமான, இறுக்கமானஆட்சியும்,சிங்களதேசியத்தைப் பாதுகாப்பாகவைத்திருக்கும் விட்டுக் கொடுக்காதஅரசியல் தலைமையும் தேவைஎன்பதுதொடர்ந்தும் அன்றும் இன்றும் முன்வைக்கப்படுகிறது. அதிகாரத்தைக் குவித்துவைத்திருப்பதற்கானமுயற்சிகள் நிறைவேற்று ஜனாதிபதிமுறையைநீக்குவதாகக் கூறிக்கொண்டேசெயற்படுத்தப்படுகிறது.
சிங்களபௌத்ததேசியவாதம் என்பதுபோர் உக்கிரமடைந்தகாலங்களில் தேசியஅரசியலிற்குள் பெரும் ஆதிக்கம் செலுத்தவில்லை.ஆனால்1994 – 2004 காலப் பகுதிக்குள் அதன் ஆதிக்கம் பிரதானஅரசியல் நீரோட்டத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளது. சிங்களபௌத்ததேசியவாதம் என்பதுபோரையும்,போரின் நோக்கங்களையும் இறுகவைத்திருப்பதற்கானபசையாகசெயற்பட்டது. படிப்படியானபோரின் வெற்றிதேசிய இனப் பிரச்சனைக்கானதீர்வுகளைப் படிப்படியாகபின்னோக்கித் தள்ளியதோடுசிறுபான்மையோர் பிரச்சனைஎன்பதுநாட்டில் இல்லைஎனக் கூறிஅதிகாரபரவலாக்கக் கோரிக்கைகளைவழங்குவதற்கானபுறச் சூழல் தற்போது இல்லைஎனவிளக்கம் அளிக்கும் அளவிற்குநிலமைகள் மாறின.
ஆட்சிஅதிகாரம் என்பதுபரம்பரைச் சொத்தாகவும்,வாரிசுஅரசியல் என்பதுஏற்றுக்கொள்ளப்பட்டஅல்லதுஏற்றுக் கொள்ளவேண்டியநடைமுறையாகவும் மாற்றமடைந்து,அவ்வாறானதலைமுறையினரேதேசத்தைஎதிர்நோக்கும் ஆபத்துக்களைக் களையவல்லவர்கள் எனவும் புலப்படுத்தும் வம்சஅரசியல் மக்களைநம்பவைக்கும் வகையில் எடுக்கப்பட்டன.ஆவை இன்றுவரைதொடருகின்றன. இத்தகையமுயற்சிகள் பலவும் எதிர் அணிகளுக்குப் பயமுறுத்தலாகவும்,அச்சுறுத்தலாகவும்,அரசஅதிகாரிகள் அரசியல்வாதிகளின் சட்டவிரோதஉத்தரவிற்குப் பணியும் அளவிற்குநிலமைகள் மாற்றமடைந்தன.
நாட்டின் அபிவிருத்திஎன்பதுஅவ்வப் பிரதேசமக்களின் ஜனநாயகஅபிலாஷைகளொடுஎடுக்கப்படாமல் அவைஅரசமட்டத்தில் எடுக்கும் முடிவுகளைநிறைவேற்றும் திட்டங்களாகவும், இவ் அபிவிருத்திஎன்பதுநாட்டின் பாதுகாப்புடன் வெளிப்படையாகஅல்லதுமறைமுகமாக இணைக்கப்பட்டதாகவும், ஊழல் என்பது ஓர் குறித்தஅடையாளம் காணப்படமுடியாதபுள்ளியிலிருந்துதொடங்குவதாகவும்எதிர் காலத்தில் குறிப்பாகவடக்கு,கிழக்கில் போர்க்காலநிலமைகள் மீண்டும் எழாதவாறுதடுப்பனவாகவும் அமைந்தன. சிங்களகுடியேற்றதிட்டங்கள் கேந்திர ஸ்தானங்களில் ராணுவஉதவியுடன் நிறைவேற்றப்பட்டன. ராணுவமுகாம்கள் அருகாமையில் அமைந்தன. தமிழர்களின் ஒற்றுமையைஅல்லதுசெறிவினைத் தணிக்கும் பொருட்டுஆங்காங்கேசிங்கள, முஸ்லீம் குடியிருப்புகள் பாலஸ்தீனர்களின் நிலங்களில் யூதக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டதுபோலராணுவகுடியிருப்புகளின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டன. இவை யாவும் தமிழ் மக்களைத் திட்டமிட்டேதேசியஅரசியலிலிருந்துஒதுக்குவதற்கானமுயற்சிகளாகஅமைந்தன.தேசியநல்லிணக்கமுயற்சிகளுக்குப் பாதகமாகஅமைந்தன.
இவ்வாறானதிட்டமிடுதல்கள் என்பதுஒருகட்சியினரின் அல்லது கூட்டணியினரின் செயற்பாடுகள் எனநாம் கருதமுடியாது. ஏனெனில் பிரதானஎதிர்க்கட்சிகள் பலவும் இவற்றைமௌனமாகஏற்றேசெயற்பட்டன. இல்லையேல் அதாவது இத்தகையநடவடிக்கைகள் தேசியஐக்கியத்தைக் குலைக்கும் என இக் கட்சிகள் கருதியிருக்குமானால் இவற்றைஎதிர்ப்பதோடு,தாம் பதவிக்குவந்தால் மாற்றுவதாகவும் தெரிவித்திருக்கமுடியும். இவைநடைபெறவில்லை.
சிறுபான்மைச் சமூத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்,பிரதானகட்சிகளின் தலைவர்களின் ஏவலாளர்களாகஅல்லதுகையேந்துபவர்களாகஅல்லதுஅரசியல் சந்தையில் யாருடன் இணைந்தால் பயன் கிடைக்கும்? பாதுகாப்புக் கிடைக்கும்?எனஏங்குபவர்களாக,தனதுபாராளுமன்றஆசனங்களைவிலைபேசியாரிடம்தமதுசுயநலத் தேவைகளைப் பூர்த்திசெய்யலாம்?எனப் பேரம் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் எதிர்க்கட்சிகள் விலைக்குவாங்கப்பட்டதால் பிளவுபட்டன. பலவீனமடைந்தன. அதன் தலைவர்கள்பகிரங்கமாகவேஅவமானத்தைத் தேடினர்.
சமீபத்தையதேர்தல் பிரச்சாரங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் நாட்டில் ஓர் போர்க்காலச் சூழல் காணப்படுவதானதோற்றப்பாடுஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவதுதேசியஆபத்துஅண்மித்துள்ளதாகஉரைகள் அமைகின்றன. கடந்தஈஸ்ரர் ஞாயிறுபடுகொலைகளுக்கானகாரணம் அரசாங்கம் மேற்குநாடுகளின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்துசெல்வதாகவும்,நாட்டின் ராணுவத்தினரைசர்வதேசநீதிமன்றத்தில் நிறுத்துவதற்குஉதவுவதால் அவர்கள் மனமுடைந்துள்ளதாகவும் கூறிதாம் ராணுவத்தினரைஅவமானப்படுத்தவதைஅல்லதுநீதிமன்றத்தில் நிறுத்துவதைஒருபோதும் ஏற்கப் போவதில்லைஎனச் சூழுரைக்கின்றனர். வெளிநாடுகளின் கட்டுப்பாடுகளுக்குஅரசுஒருபோதும் இணங்கப் போவதில்லைஎன்கின்றனர்.
கடந்தகாலங்களில் முஸ்லீம் மக்களின் வர்த்தகம்,சனத்தொகைவளர்ச்சிஎன்பவற்றைவைத்துஅரசியல் நடத்தினர். இவைதற்போதுகுறைந்துபுதியதந்திரம் கையாளப்படுகிறது. அதாவது முஸ்லீம் தீவிரவாதம்,அடிப்படைவாதம் என்பனவற்றைதம்மால்தான் கையாளமுடியம். சிங்கள,பௌத்தர்களின் அடையாளங்களை,தாய் நாட்டைப் பாதுகாக்கவேண்டுமெனில் பயங்கரவாதத்தை,தீவிரவாதத்தைக் கையாளும் இறுக்கமானதலைவர் அவசியம் எனஅடிக்கடிவலியுறுத்திசர்வாதிகாரிஒருவரின் அவசியத்தைமக்கள் உணர்வில் எடுத்துச் செல்வதற்கானநியாயங்கள்வெவ்வேறுவகைகளில்,வெவ்வேறு இனவாதபேச்சாளர்கள் மூலம் இனவாதமாக,கேலியாக,தேசியபாதுகாப்பிற்குஅச்சுறத்தல் தருபவர்கள் யார்? என்பதைமறைமுகமாகஉணர்த்தும் வழிகளில் உரைகள் அமைந்துள்ளன.
மேற்குறித்தநிலமைகள் ஓர் பாசிசத்தைநோக்கியவழியில் இழுத்துச் செல்வதாகநாம் விவாதித்தால் அதனைமறுதலிப்பதற்கானபலகாரணங்கள் இருக்கலாம். அவைசரியாகவும் இருக்கலாம். இருப்பினும் போர்க்காலத்தில் சிங்களசமூகத்திற்குள் ஏற்பட்டமாற்றங்களும்,ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளும் இன்னமும் தொடர்வதாகவும்,புதிய ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனசார்பில் போட்டியிடும் கோதபய ராஜபக்ஸ அவர்கள் அவற்றின் தொடர்ச்சியாகவேஉள்ளார் என்பதேஎமதுகருத்தாகும்.
( தொடரும் )

Author: theneeweb