கிளிநொச்சில் அதிகரித்துள்ள காச்சலும், வயிற்றோட்டமும்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது காச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக பெரும்பாலனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காச்சல் வயிற்றோட்டம், வாந்தி என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மாவட்ட வைத்தியசாலையில் அதிகளவில் சிகிசை பெற்று வருவதாவும், முக்கியமாக இதன் தாக்கத்திற்கு அதிகளவு சிறுவர்கள் உள்ளாக்கியுள்ளதாகவும் வைத்தியசா தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவில் வழமைக்கு மாறாக அதிகளவான நோயாளர்கள் நாளாந்தம்  சிகிசைக்கு வருவதாகவும், அதில் பெரும்பாலானவர்கள்  விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிசை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தின்  நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதோடு, ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக பேணுவதோடு, நன்கு சுட்டாறிய நீரை குடிப்பதற்கு பயன்படுத்துமாறும், சிறுவர்கள் மலசல கூடத்திற்கு சென்று வந்த பின்னர் கைகளை நன்றாக  சவற்காரம்  கொண்டு கழுவுமாறும் சுகாதார துறையினரும்  அறிவுறுத்தியுள்ளனர்.52

Author: theneeweb