மலையாளபுரத்தில் இலவச கணிணி கூடம் திறப்பு

கிளிநொச்சி மலையாளபுரம், பாரதிபுரம் பிரதேச மாணவர்களின் நலன் கருத்தி  கிராமங்களுக்கு கணிணி அறிவை கொண்டு செல்லும்  செயற்றிட்டத்திற்கு அமைவாக இலவச  கணிணி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அப்பாப்பிள்ளை ருக்மணி நவரட்ணா ஞாபகார்த்த இலவச கணிணிக் கூடமானது பாரதிபுரம் மலையாளபுரம் விஞ்ஞானக் கல்வி நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில்  அமெரிக்காவில் வசிக்கின்ற மருத்துவர் இந்திரா மற்றும் தேவராணி ஆனந்தசபாபதி ஆகியோரின் பங்களிப்பில் இந் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் நான்காவது இலவச கணிணிக் கூடம் இதுவாகும்.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மருத்துவர் இந்திரா மற்றும் தேவராணி ஆனந்தசபாபதி உலக சுகாதார மருத்துவ நலச் சங்கத்தினை சேர்ந்த முரளி இராமலிங்கம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபால அதன் உப தலைவர்  வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் அ.பங்கையற்செல்வன் மற்றும் கல்வி நிலையத்தின் நிர்வாகி தீபன் ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Author: theneeweb