தமிழரசுக் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்- முன்னாள் ஆளுநர்

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை, முன்கொண்டு செல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்று, வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்திடம் சென்று மனித உரிமைகள் சம்மந்தமாக முறைப்பாடுகளை செய்து வருகிறது.

தமிழ் மக்களின் தோளில் ஏறிக் கொண்டு அரசியல் நடத்துகிறது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே தமிழ் மக்கள் மேற்கொள்வார்கள் என்று ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுசெயலாளர் எஸ்.சதாசிவம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Author: theneeweb