வவுனியா நகர்ப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்படுமா?

வவுனியா நகர்ப்பகுதியில் நகரசபைக்கு சொந்தமான இடங்களிலும் விதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரிய இடங்களிலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகர்ப்பகுதியில் வீதிகளை ஆக்கிரமித்து பல சட்டவிரோதமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நகரசபைக்கு சொந்தமான வீதிகளையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான தர்மலிங்கம் வீதி சந்தியிலும் கடைகள் அமைக்கப்பட்டள்ளன.

இது தொடர்பில் வவுனியா நகரசபை நீதிமன்றத்தினை நாடி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் குறித்த சட்டவிரோத கடைகள் சீரமைக்கப்பட்டு நிரந்தர கட்டிடங்களாக மாறியுள்ளன.

 

இதற்குமப்பால் வெளிப்புறமாக தகரத்தினால் அமைக்கப்பட்ட கடைகள் உள்புறமாக சீமெந்து கட்டிடங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் நகரசபை நடவடிக்கை மேற்கொள்ளாத நிலை காணப்பட்டு வருகின்றது.

தர்மலிங்கம் வீதி சந்தியிலுள்ள இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கடைகள் நிரந்தர கட்டிடங்களாக அமைக்கப்பட்டு தற்போது அவை மத ஸ்தலமொன்றின் காணி என உரிமை கோரப்பட்டு வருகின்றது.

 

எனினும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆட்சியில் உள்ள வவுனியா நகரசபை இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவில்லை என்பது கவலைக்குரியதே எனவும் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb