பொய்யான, கீழ்தரமான செய்திகளை வெளியீட்டு தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியிலே காணப்படும் நல்லுறவை சீர்குழைக்க சிலர்முனைகின்றனர்

பொய்யான, கீழ்தரமான செய்திகளை வெளியீட்டு தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியிலே காணப்படும் நல்லுறவை சீர்குழைக்க சிலர் முனைவதாகவும் அதிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஆளுனரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

அவ்வாறு செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி நானோ, என்னுடைய அதிகாரிகளோ கோரவில்லையெனவும், இச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இவ்வாறான கீழ்தரமான செய்திகள், கீழ்தரமானவர்களின் நடவடிக்கைகளிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share:

Author: theneeweb