இலங்கை அகதிகள் 24 பேர் மலேசிய பாதுகாப்பு பிரிவினால் கைது

இலங்கை அகதிகள் 24 பேர் கைது..
இலங்கை அகதிகள் 24 பேர் மலேசிய பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மலேசியாவிலிருந்து நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நோக்கி பயணிகயிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 12 ஆண்களும், 08 பெண்களும் மற்றும் 04 சிறிய குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பிரஜைகள் 10 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆள்  கடத்திலில் ஈடுபடுபவர்கள் என சந்தேகத்தின் பேரில் மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb