கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்தில் 597 குடும்பங்களைச் சேர்ந்த 41317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்தில் 597 குடும்பங்களைச் சேர்ந்த 41317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக 41317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் இன்று 25-12-2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் இப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.  இவர்களில்  5885 போ்  19 நலன்புரி நிலையங்களில்  தங்கியுள்ளனர்.
அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3142 குடும்பங்களைச் சேர்ந்த 10339 பேரும், கண்டாவளையில் 7635 குடும்பங்களைச் சேர்ந்த 24820 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1819 குடும்பங்களைச் சேர்ந்த 6156 பேரும் பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அத்தோடு 23 வீடுகள் முழுமையாகவும், 314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது எனவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *