​அ​மெ​ரிக்கா: 2 ஆண்​டு​க​ளில் 8,158 தவறான தகவல்கள்?

அமெ​ரிக்க அதி​ப​ரா​கப் பத​வி​யேற்ற 2 ஆண்​டு​க​ளில் டொனால்ட் டிரம்ப், உண்​மைக்​குப் புறம்​பான 8,158 தக​வல்​களை டிரம்ப் தெரி​வித்​துள்​ள​தாக அந்த நாட்டி​லி​ருந்து வெளி​யா​கும் வாஷிங்​டன் போஸ்ட் நாளி​தழ் தெரி​வித்​துள்​ளது.
இது​கு​றித்து புள்​ளி​வி​வ​ரங்​களை மேற்​கொள்​காட்டி அந்த நாளி​தழ் கூறு​கை​யில், டிரம்ப் தனது ஆட்சிக் காலத்​தின் முத​லா​வது ஆண்​டில் சரா​ச​ரி​யாக தின​மும் 5.9 தவ​றான தக​வல்​களை அளித்து வந்​த​தா​க​வும், அந்த எண்​ணிக்கை இரண்​டா​வது ஆண்​டில் 16.5-ஆக அதி​க​ரித்​த​தா​க​வும் தெரி​வித்​தது. பெரும்​பா​லும் அக​தி​கள் விவ​கா​ரத்​தில்​தான் அவர் தவ​றான தக​வல்​களை அளித்​த​தாக அந்த நாளி​தழ் குறிப்​பிட்​டுள்​ளது.

Share:

Author: theneeweb