பிக்குனியை வன்புணர்ந்த தேரரும் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிக்குனி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிக்குவும் அவரது சாரதியும் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பிரதான நீதவான் ஜானக சமரசிங்க இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த இருவரும் அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பதவிய – 18 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள விகாரையொன்றின் தேரரும், தலாவ – கோன்கொல்லேவ பகுதியை சாரதியும் என தெரிவயவந்துள்ளது.

43 வயதான குறித்த பிக்குனி கடந்த 16 திகதி ஆம் திகதியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

விகாரை ஒன்றுக்கு அழைத்து செல்வதாக கூறி சிற்றூர்தியில் அழைத்து சென்றே பிக்குனியை குறித்த இருவரும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 வயதான குறித்த தேரருக்கு எதிராக பதவிய நீதவான் நீதின்றத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb