கினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா

கினியம இக்ராம் தாஹாவின் ~உரிமைக் குரல்| சிறுகதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் குளிஃ இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.டி.எம். ஹாசிம் தலைமையில் நடைபெற்றது.மௌலவி எஸ்.எச். ரியாஸ்தீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை நூலாசிரியரின் சகோதரர் எம்.ரீ.எம் தஹ்லான் நிகழ்த்தினார். கானெம் கினியம குளோபல் சொசைடியின் உப தலைவர் எம்.எஸ்.எம். றிமாஸின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை ப்ரைட் சர்வதேசப் பாடசாலை அதிபர் அல்ஹாஜ். ஏ.எச்.எம். நஸீர் அவர்களும், விசேட பிரதியை அப்ரா ஹார்ட்வெயார் உரிமையாளர் அல்ஹாஜ் எப். அலாவுதீன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.

நூல் நயவுரையை பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், கருத்துரையை குளியாப்பிட்டிய கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்களும் நிகழ்த்தினார்கள், வாழ்த்துரைகளை விடிவெள்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ், மேல் மாகாண ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம். இன்சார், மேசி கல்வி வளாக அதிபர் அல்ஹாஜ். ஏ.எச். சமீம், தர்கா நகர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும் எழுத்தாளருமான யாழ். ஜுமானா ஜுனைட் ஆகியோரும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி கவி வாழ்த்தை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் இக்ராம் தாஹாவினால் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கப்பட்டது. ஐ.எல்.எம். இக்பால் ஆசிரியர் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை அழகுற தொகுத்து வழங்கினார். 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb