தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார்.

அடிப்படைச் சம்பளமாக 700 ரூபா, மேலதிக கொடுப்பனவு 50 ரூபாவுடன் 750 ரூபாய் நாளாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில காலமாக அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

Share:

Author: theneeweb