வடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வடக்கில் 249 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம்
வட மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக 249 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவான பட்டதாரிகள் தொடர்பான முழுமையான தகவல்களை www.np.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Share:

Author: theneeweb