கிளிநொச்சியில் புதிய உப புகையிரத நிலையம் திறப்பு

கிளிநொச்சியில் புதிய உப  புகையிரத நிலையம் திறப்பு

அறிவியல் நகர் உப புகையிரத நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய ரயிலின் சேவையும் ஆரம்பம்

கிளிநொச்சி அறிவியல் நகரிலில் அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூனரணதுங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் வாங்கிய இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த புதிய S13 ரயில்உத்தரதேவி ரயில் சேவையாக கொழும்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையில் சேவையினை ஆரம்பிக்கவுமுள்ளது. இந்த ரயில் சேவை அமைச்சரால் மருதானை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைப்பதுடன். யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் ரயிலில் பயணிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நாளைய தினம் அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் அமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைஅருகில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உத்தரதேவி, யாழ்தேவி, இரவு தபால் ரயில் ஆகியன நிறுத்தப்படவுள்ளன.

புதிய ரயில் 30 ஆம் திகதி சேவையினை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்பட்ட நிலையில் முனகூட்டியே 27 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையில் சேவையில் ஈடுபட்டுள்ளது.

மருதானையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடைந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணிக்கும். பின்னர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

இதில் அமைச்சர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் முக்கிய அதிதிகளும் வருகைதரவுள்ளனர்.

திங்கட்கிழமை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு முற்பகல் 11. 50 இற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு காலை 6.10 இற்கும் சேவையில் ஈடுபடும்.

Share:

Author: theneeweb