கழிவறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி!!

16 வயது பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவமொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை , மெதகம பிரதேசத்தை சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , தான் கர்ப்பமுற்றிருப்பது குழந்தை பிறக்கும் வரையில் தனக்கு தெரியாது என குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட வயறு வலியினை தொடர்ந்து கழிவறை சென்ற போது , குழந்தை பிறந்ததாக குறித்த மாணவி காவற்துறையில் மேலும் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த இளைஞரொருவருடன் குறித்த மாணவி காதல் தொடர்பினை பேணி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது , குறித்த இளைஞரால் மாணவி பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு , நேற்று பிபில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி மற்றும் சிசு நல்ல தேக ஆரோக்கியத்துடன் பிபில ஆதார மருத்துவமனையின் சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb