ஸ்ரீலங்கா ஏன் தோல்வியடைந்த ஒரு நாடாக உள்ளது (2)

—ஒலிவர் ஏ.இலுப்பெரும—

ஒரு நாடு சட்டம் ஒழுங்கு என்பதில் செழிப்படைவதற்கு நிருவாகமுறை நன்கு வேரூன்றியிருக்க வேண்டும். சட்டங்களை அமல்படுத்துவது நீதித்துறைக்கு உரியது மற்றும் ஒரு எளிய சிவில் வழக்கைத் தீர்ப்பதற்கு ஆறு வருடங்கள் ஆகின்றன, இதில் எங்கேயோ ஏதோ தவறு இருக்க வேண்டும். காணி சச்சரவு பற்றிய வழக்குகள் 20 வருடங்கள் வரை இழுபட முடியும் அந்த காலத்திற்குள் அசல் வழக்காளிகள் இறந்துவிடுகிறார்கள். கொலைக் குற்றச்சாட்டுகளில் கூட, சில வழக்குத் தவணைகள் நடைபெற்ற பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலையாகி விடுகின்றனர் மற்றும் வழக்குகள் வருடக் கணக்கில் இழுபடுகின்றன. இந்த வகையான நடைமுறை உலகில் வேறு எங்காவது இயங்குகிறதா? “தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி” என்பது பிரபலமான ஒரு மேற்கத்தைய சட்டக் கோட்பாடு, நீதி வழங்கப்படுவதற்காக பெருந்தொகைப் பணத்தை வழக்கறிஞர்களுக்கு கொடுத்துவிட்டு காத்திருக்கும் மக்கள் துன்பப்படவேண்டியுள்ளது. தற்போதைய அமைப்பு வழக்கறிஞர்களை பணக்காரர்களாக்கும் முறையிலேயே உள்ளது மற்றும் பாராளுமன்றம் கூட வழக்கறிஞர்களான பல அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது ஆனால் விரைவான நீதிக்காக அது ஒருபோதும் சட்டம் இயற்றியதில்லை.

சமீபத்தில் தங்காலை நீதிமன்றில் ஆறுபேருக்கு தண்டனை வழங்கப்பட்டது, அவர்கள் குற்றம் புரிந்து 22 வருடங்கள் கழிந்த பின்புதான் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துக்கோறளை கூட சமீபத்தில் 750,000 வழக்குகள் நீதிமன்றங்களில் தீர்ப்புகளுக்காக நிலுவையில் உள்ளதாகவும் அதற்கான பிரதான காரணம் வழக்குகளை ஒத்திவைப்பதுதான் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பரிதாபகரமான நிலமையை ஒழிக்க அரசாங்கம் எதையாவது செய்யுமா என்பது சந்தேகமாக உள்ளது. என்னைப்போன்ற ஒரு தனியாள் அல்லது ஒரு பத்திரிகை நீதிமன்றங்களில் வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்பதையும் மற்றும் வழக்குகள் நீண்ட காலமாக இழுபடுகிறது என்பதையும் முன்னிலைப்படுத்துவது ஆபத்தான ஒன்று ஏனென்றால் நீதிமன்றங்களால் இதற்காக வழக்குத் தொடரப்படலாம் என்கிற அச்சம்தான் அதற்கான காரணம், முன்னர் எஸ்.பி. திசாநாயக்காவுக்கு என்ன நடந்தது மற்றும் இப்போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவும் இதில் அகப்பட்டுள்ளார்.

உண்மையான ஜனநாயகத்தில் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரண்டு புலனாய்வு ஊடகவியலாளர்கள் வாட்டர்கேற் ஊழலை வெளிப்படுத்தியதன் காரணமாக ஜனாதிபதி றிச்சட் நிக்சன் ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டி நேர்ந்தது. முந்தைய ராஜபக்ஸ ஆட்சி ஊடகவியலாளர்களுக்கு நிதி வெகுமானங்கள் வழங்குதல், அவர்களுக்கு இன்பச் சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களது பிள்ளைகளை கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புதல் போன்றவற்றை வழங்கி ஊடகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தங்களால் விலைக்கு வாங்கமுடியாத ஊடகவியலாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள் அல்லது எக்னாலிகொட வழக்கினைப்போல கொலை செய்யப்பட்டார்கள். தற்போதைய அரசாங்கம் மட்டும் சிறந்த ஒன்றாகிவிடவில்லை, ஜனாதிபதி கடந்த வருடம் நியுயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விஜயம் செய்தபோது அவரது குழுவில் 13 ஊடகவியலாளர்களும் இணைந்திருந்தார்கள் மற்றும் எந்தவொரு அச்சு ஊடகமோ அல்லது பெரும்பாலான இணையத்தளங்களோ இந்த மிகப்பெரிய நிதி மோசடி பற்றி முன்னிலைப்படுத்த தைரியம் இல்லாதது நிச்சயமாக ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை. இத்தகைய கருத்து சுதந்திரம்தான் நம்நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுகிறது மற்றும் இந்த மண்ணில் எங்களுக்க ஜனநாயகம் இருக்கிறது எப்போதாவது எங்களால் கோர முடியுமா? இதேபோல பிரதான நீரோட்டத்தில் உள்ள எந்தவொரு ஊடகமும் பிரதமருக்காக ஆடம்பரச் செலவாக 590 மில்லியன் ரூபாயில் இரண்டு சொகுசு மோட்டார் வாகனங்கள் வாங்கவிருப்பதைப் பற்றி செய்தி வெளியிடவில்லை. இதில் மேலும் ஆச்சரியம் தருவது என்னவென்றால் அரசாங்க நிதியை இவ்வாறு துஷ்பியோகம் செய்வது தொடாபான அறிக்கை பற்றி அரசாங்கம் ஆழ்ந்த மௌனம் சாதிப்பதுதான்.

நான் அடிக்கடி சந்திக்கும் படித்தவர்கள் பலரும் தற்போதைய நிலமை நம்பிக்கையற்றதாகத் தெரிவது பற்றி புகார் தெரிவிக்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக விமர்சிப்பது இரண்டு பிரதான கட்சிகளும் சாதாரண பொதுமக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்திருப்பது பற்றியே. நான் என்னுடைய மாணவர்களுக்கு அறிவுறுத்துவது, பட்டம் பெற்றதின் பின்னர் அவாகள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும் ஆனால் தாய்நாட்டுக்கு சேவை செய்வதற்காக திரும்பி வரவேண்டும் என்று. இப்போது நான் அதற்கு முற்றிலும் எதிரான அறிவுறுத்தலையே வழங்குகிறேன் திருத்த முடியாத அளவுக்கு அரசியல்வாதிகளால் பாழாகிவிட்ட இந்த நாட்டுக்கு ஒருபோதும் திரும்பி வரவேண்டாம் என்று. ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது, அதிகாரம் ஒரு தொகை திருடர்களிடமிருந்து மற்றொரு மோசமான கும்பலுக்கு மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறது மற்றும் சாதாரண குடிமகனுக்காக இல்லாமல் அரசியல்வாதிகளின் நிதி வசதிகளுக்காக மட்டுமே வாங்கப்பட்டிருக்கும் பெருந்தொகை கடன்களின் பின்விளைவுகளை நமது எதிர்கால சந்ததியினர் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ருபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணம் நமது தேசிய உற்பத்தியின் குறைவுதான். நாங்கள் வெங்காயம்,பருப்பு,உருளைக்கிழங்கு,பயறு மற்றும் எள்ளு போன்ற ஏராளமான எங்கள் உணவுத் தேவைகளை இறக்குமதி செய்கிறோம். இந்த அத்தியாவசிய பொருட்களை எங்கள் சொந்த நாட்டிலேயே விளைவித்து பயிர்ச்செய்கையை அதிகரிக்க திட்டம் எதுவும் இல்லை. எங்கள் இயற்கை கனிம வளங்களைப் பயன்படுத்தி ஏற்றுமதியை வலுப்படுத்த நாம் எதுவும் செய்வதில்லை.கனிம மணல், பொஸ்பேற் பாறை, இரும்புத்தாது, கனிம தோறியம் மற்றும் கிரபைட் போன்ற எக்கச்சக்கமாகக் காணப்படும் கனிம வளங்கள் ஒன்றில் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது முற்றாகப் பயன்படுத்தப் படுவதில்லை.
இந்த எழுத்தாளர் கடந்த நான்கு தசாப்தங்களாக ஒரு இரசாயனத் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து எங்கள் தாதுக்களில் இருந்து பெறுமதி கூடிய பொருட்களை உற்பத்தி செய்யும்படி வற்புறுத்தி வந்தபோதிலும் அந்த வேண்டுதல் எங்கள் அரசியல்வாதிகளின் செவிகளில் ஏறவில்லை.

பேருவிலவில் உள்ள அரிதான நிலக்கீழ் கனிமங்கள் 1970 களில் ஏற்றுமதி செய்யப்பட்டன, ஆனால் சுதந்திர பொருளாதாரம் வந்ததின் பின்னர் இது முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது, கட்டுக்குருந்துவவில் நிறுவப்பட்டிருந்த கட்டிடங்களையும் மற்றும் உபகரணங்களையும் ஜேஆர்.ஜெயவர்தனா காவலர் பயிற்சிப் பாடசாலைக்கு வழங்கிவிட்டார். அரிதான பூழித் தாதுக்களுக்கு சர்வதேசச் சந்தையில் உயர்ந்த விலை கிடைத்தது ஏனென்றால் அவை மின்னியல் கருவிகளில் சென்சர் எனப்படும் உணர்திறன் கருவி செய்வதற்கு விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல இல்மனைட் போன்ற கனிமங்களை எந்தவித மதிப்பு கூடுதல் பொருட்களும் செய்யாமல் வெறுமனே ஏற்றுமதி செய்வதுடன் அதன் மூலம் செய்யப்பட்ட உற்பத்திகளை ஆயிரம் மடங்கு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்கிறோம். எங்களிடம் மிகச் சிறப்பான தரமுள்ள கிறபைட் உள்ளது. மற்றும் நாங்கள் உள்நாட்டில் கிறபைட்டைக் கொண்டு பென்சில்களைக் கூடச் செய்வதில்லை. எப்பாவெலவில் உள்ள அப்படைட்டு மூலம்; பொஸ்பேற் உரம் தயாரித்தால்; வருடாந்தம் 5 பில்லியன் ரூபாக்களை உர மானியத்தினால் மட்டும் நாடு சேமிக்க முடியும், மற்றும் இந்த உரத்தை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிருமாணிப்பதற்கான மொத்த செலவு கிட்டத்தட்ட 3 பில்லியன் ரூபா மட்டுமே. அரசியல்வாதிகள் நினைப்பது மதிப்புமிக்க இந்த பொஸ்பேற் இருப்பு அவர்களது சொந்த உடமை என்று, அதன் காரணமாக ஒரு வெளிநாட்டு முதலீட்டாளருக்கு அதை விற்பதன் மூலம் ஒரு சில ரூபாய்களை சம்பாதிக்க முயலுகிறார்.

இத்தகைய அரசியல் தலையீடு காரணமாக பொஸ்பேற் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பல முன்னைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. எங்களுடைய நிதித் திட்டமிடல் யாவும் ஆற்று மணலுக்கும் மற்றும் கடல் மண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறியாத பொருளாதார நிபுணர்களாலேயே மேற்கொள்ளப் படுகிறது. எங்கள் பிரதான தோட்டப் பயிர்களான தேயிலை மற்றும் றபர் போன்றவை பிரபல களைநாசினியான கிளைபொஸ்பேற்றை முட்டாள்தனமாகத் தடை செய்ததன் காரணமாக பாதிப்படைந்து வருகின்றன, அதைத் தடைசெய்வதற்கான அடிப்படைக் காரணம் விஞ்ஞ}னபூர்வமற்ற சில காரணங்களை பிக்கு ஒருவர் ஜனாதிபதிக்கு வழங்கியதே ஆகும். அத்துடன் எங்கள் தேயிலையை இறக்குமதி செய்யப்பட்ட மலிவான தரமுள்ள தேயிலையுடன் கலக்கும் ஊழலான நடவடிக்கை “சிலோன் ரீ” என்கிற எங்கள் வர்த்தக முத்திரையை பாழாக்கி விட்டது. இதேபோல எங்கள் வாசனைத்திரவியங்களான கரு மிளகு மற்றும் கறுவா போன்றவை இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உற்பத்திகளுடன் கலப்படம் செய்யப்படுகின்றன. பத்திரிகை அறிக்கைகளின்படி, டிஎஸ்ஐ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பொருளாதார சபையிடம் முறையிட்டிருப்பது, இப்போது அவர்கள் சீனாவில் இருந்து காலணிகளை இறக்குமதி செய்யப் போவதாக, எங்கள் பிரதமர் கோபமடைந்து இந்த நிறைவேற்;று அதிகாரியை திட்டித்தீர்த்துள்ளார். அவரால் இத்தகைய உள்ளுர் வியாபாரிகளைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கிவிடலாம் ஆனால் அவரது பொருளாதார திட்டமிடல் பிரிவில் உள்ள அவரது மூன்று நண்பர்களும் நாட்டின் பொருளாதாரத்தை மேலுயுயர்த்துவதற்கு என்ன செய்துள்ளார்கள்? மத்திய வங்கி மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவை என்பனவற்றில் அவர் செய்த நியமனங்கள் யாவும் அவரது பாடசாலை நாட்களில் அவர்களுடனான நட்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன மற்றும் அவை இரண்டுமே மோசமாகத் தோல்வியடைந்துள்ளன மற்றும் இந்த நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளன.

இந்த பொருளாதார தோல்விகளை மக்களின் ஈடுபாட்டின் மூலமே சரி செய்ய முடியும் குறிப்பாக நாட்டிலுள்ள புத்திஜீவிகளினால். ஐதேக, ஸ்ரீலசுக (அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) போன்ற பிரதான் நீரோட்டத்திலுள்ள அரசியற் கட்சிகள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் பலத்த தோல்வி கண்டுள்ளன. முற்றிலும் கட்சிப் பாகுபாடற்ற ஒரு ஜனாதிபதியால் மட்டுமே நாட்டை முன்னோக்கிச் செலுத்த முடியும்;, மற்;றும் இந்த நாட்டில் வாழும் மக்கள் ஆழமான தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கு ஒரு சிறப்பான நாடு வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb