மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள கட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் நாதன்குடியிருப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று(27) பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தகப் பை, கொப்பிகள், கொம்பாஸ் பெட்டி, கலர்பெட்டி, எழுதுகருவிகள் உள்ளடங்கி கற்றல் உபகரண தொகுதிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கட்டைக்காடு பாடசாலையில் கல்வி கற்கின்ற 64 மாணவர்களுக்கும், நாதன் குடியிருப்பு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 53 மாணவர்களுக்கும் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவிஸ் நலன் காப்போம் அமைப்பினரால் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு ஏற்கனவே இவ்வமைப்பினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள். காலணிகள், கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb