போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவற்துறை அதிகாரிகளுக்கு விருது

போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காக விஷேட ஒத்துழைப்புக்களை வழங்கிய காவற்துறையினருக்கு நாளை ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

‘ஜனபதி பிரஷன்சா’ எனப்படும் ஜனாதிபதி பாராட்டு என்ற பெயரில் இந்த விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை முற்பகல் 10 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

2015 ஜனவரி 14ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள், திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய விசேட செயலணியின் அதிகாரிகள் மற்றும் காவற்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 1034 பேருக்கு ஜனாதிபதியினால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Share:

Author: theneeweb