வௌிநாட்டு பணியாளர்களுக்கு மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கு பத்து மில்லியன் ரூபாய் வரையான வீட்டுக்கடன் வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சிறு மோட்டார் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் பணியாற்றுகின்றவர்களுக்கான கடன் 15 வருடங்களில் செலுத்த முடியும் என்பதுடன், அவர்களுக்கு இரண்டு வருட நிவாரண காலமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான பதிவினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் மேற்கொண்டு, உள்நாட்டு வங்கியொன்றில் நிதி வைப்புச் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb