வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டன” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

“மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இருவரும் என மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தைப்பொங்கல் தினமான கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் இருவரை துரத்தி வந்து வாள் வெட்டுச் மேற்கொண்ட. சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்” என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags

Share:

Author: theneeweb