அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று (28) நண்பகல் 12 மணி அளவில், அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்ப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், கூட்டு தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் முதலாலிளமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அதனடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைய சம்பளம் 700 ரூபாவாகவும் தேயிலையின் விலை அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 50 ரூபாவும் மேலதிக ஒரு கிலோ தேயிலைக்கு 40 ரூபாவும் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று மாத நிலுவை தொகையை வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு அமுலில் இருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

Share:

Author: theneeweb