திருகோணமலை – உப்புவெளி காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 8 பேர் கைது

திருகோணமலை – உப்புவெளி காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பு நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக உப்புவெளி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டமை, கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்தமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள், தேவநகர், பெரியகுளம், காந்திநகர், செல்வநாயகபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb