விமலிடம் மூன்று மணி நேரம் வாக்குமூலம் பதிவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மூன்று மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ கொலை சூழ்ச்சி தொடர்பில் இந்திய பிரஜை வெளியிட்ட கருத்து குறித்தே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார்.

Share:

Author: theneeweb