ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு வேண்டாம் ; எக்னெலிகொடவின் மனைவி கோரிக்கை

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சிறையில் உள்ள ஞான சார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம் என மனு அளித்துள்ளார்.

சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சரை இன்று நேரில் சந்தித்த அவர் இந்த மனுவை கையளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி  பொது மன்னிப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது

.இந்நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்புக்காக ஞானசார தேரரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டாம் என சந்தியா எக்னெலிகொட மனு அளித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனையான எக்னெலிகொட கடத்தல் , காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்தற்காக கிடைத்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Author: theneeweb