தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது பிரச்சினைக்கு தீர்வல்ல – மகிந்த ராஜபக்ஷ

மாகாண சபை தேர்தல் நடைபெறாத பிரச்சினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவதால் தீர்ந்து விடாது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை – மயூராபதி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பழைய முறைமையில் தேர்தலை நடத்த செயற்பட வேண்டும் என தெரிவித்த அவர், மகிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதால் குறித்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Author: theneeweb