700 ரூபா அடிப்படை வேதனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

700 ரூபா அடிப்படை வேதனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிராக மலையகத்தின் சில பகுதிகளில் இன்றைய தினமும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் பதுளை முதலான பகுதிகளில் உள்ள சில தோட்டங்களில இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

700 ரூபா நாளாந்த அடிப்படை வேதனத்திற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் சவப்பெட்டி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட மக்களால் இன்று முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொகவநந்தலாவை கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையிலிருந்து, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் உருவப் பொம்மையை ஏந்தி பேரணியாக சென்று பொகவந்தலாவ செல்வகந்த சந்தியில் வைத்து எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர் என எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேநேரம், கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா வேதன அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 1000 இயக்கம் தெரிவித்துள்ளது.

1000 இயக்கம் சார்பில் கருத்து வெளியிட்ட தொழிலாளர் புரட்சி மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கூட்டு ஒப்ப்நதம் ஊடாக 730 ரூபா வேதனம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 20 ரூபா அதிகரிப்புடன் 750 ரூபா வேதனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Author: theneeweb