அரபு நாடுகளில் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலை!

அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலைச் செய்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிகமானோர் தெங்கானாவை சேந்தவர்களாக இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 முதல் 2018 வரை அரபு நாடுகளுக்கு சென்று மரணமடைந்த இந்தியர்கள் எண்ணிக்கை 28,523 ஆக இருக்கிறது. இதில் அதிகமனோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 2018-ல் ஐக்கிய அரேபிய நாடுகளில் இந்தியர்கள் 1,614 பேர் மரணமடைந்துள்ளனர். பஹரைனில் 200 பேரும், குவைத்தில் 595 பேரும், ஓமனில் 483 பேரும், கதாரில் 261 பேரும், சவுதியில் மட்டும் 2,227 பேரும் மரணடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களில் அதிகமானோர் தெங்கானாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதை அடுத்து, உத்திரபிரதேசம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb