இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக 26.12.2018 சென்று பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக 26.12.2018 சென்று பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் உடனடித் தேவைகளுக்கான நிவாரணப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பேராறு மன்னங்கனட்டி சுதந்திரபுரம் மாணிக்கபுரம் பகுதிகளில் அமைந்துள்ள முகாங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை தர்மபுரம் முரசுமோட்டை பரந்தன் ஆனந்தபுரம் முருகண்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள முகாங்களையும் ஆளுநர் அதிகாரிகள் சகிதம்; சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார்.


ஆளுநர் முகாங்களை பார்வையிட சென்றபோது அங்கு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்தார். தமிழ்; தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்;பினர் செல்வம் அடைக்கலநாதன் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேளமாழிதன் ஈபிடிபி பாராளுமன்;ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் முருகேசு சந்;திரகுமார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.தவராசா யாழ்; மாநகரசபை உப தவிசாளர்; து.ஈசன் கோப்பாய் பிரதேசசபை தலைவர் நிரோஸ் ஈபிஆர்;எல்வை சேர்ந்த உதயகுமார் உட்பட பிரதேசசபை உறுப்;பினர்களையும் சந்;தித்து கலந்துரையாடினார்.
மக்கள் முன்னிலையில் தமிழில் உரையாற்றிய ஆளுநர் உங்;கள் துக்;கத்;தினை நேரடியாக சென்று பார்வையிட்டு செய்ய வேண்டிய உதவி தொடர்;பில் தமக்;கு சொல்லுமாறு ஜனாதிபதி ஐயா என்னை அனுப்பியிருக்கின்றார். இன்;று விடியல் காலை முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முகாங்களை பார்த்து வருகின்றேன். நீங்கள் உங்கள் வீட்டுக்கு போறதிற்கு அவசியமான தேவை என்னான்டு சொல்லி நான் தேடிப்பார்கின்றேன்.


நீங்களும் எங்கிட்ட சொல்லுங்க ஜனாதிபதி இடர்முகாமைத்துவ அமைச்சரின் செயலாளருக்கு உத்தரவு போட்ட இருக்கின்றார் உங்களுக்கு வேண்டிய அனைதத்து உதவியும் செய்ய சொல்லி நான் அது சரியாக நடைபெறுகிறதா எண்று கண்காணித்துக்கொண்டு இருக்கின்றேன். அரசாங்க அதிபர் ஐயா டிஎஸ் ஐயா ஜிஎஸ் ஐயா எல்லாரைம் கூட்டி கூட்டம் போட்டு கதைச்சு இருக்கின்றேன். என்ன நடக்குது என்டு உடனுக்கு உடன் எனக்கு தெரியப்படுத்;துமாறு நீங்கள் வீட்டுக்குப்போன பிற்பாடு இரண்டு கிழமைக்கு உங்களுக்கு உலர்உணவு பொதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நுண்கடன் வழங்கிய நிறுவனம் நீங்கள் இடம்பெயர்ந்து இருக்கின்ற முகாங்களுக்கு வந்து பணம் கேட்டு கரைச்சல் கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அது தொடர்பில் நான் கூடியகவனம் செலுத்திவருகின்றேன் அது தொடர்பில் நீங்;கள் கவலை கொள்ள தேவையில்லை உங்கள் குறைகள் தொர்பாக ஆளுநர் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

Share:

Author: theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *