இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்சல் ஊழல் மோசடிப் பிரிவினரினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது லொறியை கைவிட்டுவிட்டு லொறி உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடியுள்ளதையடுத்து பொலிஸார் லொறியை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்

இந்த நிலையில் லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரியுள்ள நிலையில் லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

Share:

Author: theneeweb