படைப்புழுக்களைப் கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வைரஸ்,

படைப்புழுக்களைப் கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வைரஸ், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று கொண்டுவரப்பட்டுள்ள குறித்த வைரஸின் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியளிக்குமாயின், படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என பயிர்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த அமெரிக்க வைரஸானது, படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த பங்கசாக பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த மாவட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பயிர்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb