தாக்குதலுக்குள்ளான மாணவனின் விடயத்தில் களமிறங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது போதைப்பொருள் கஞ்சா விற்பனை தொடர்பில் பொலீஸாருக்கு தகவல் வழங்கிய பின் அச்சுறுத்தலுக்குள்ளாகி பின் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிசைப்பெற்று வரும் மாணவன் விடயத்தில் இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவும் களத்தில் இறங்கியுள்ளது.

இன்றைய தினம் 31-01-2019 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிசைப்பெற்று வரும் மாணவனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு, சம்பவ விடயங்களையும் கேட்டறிந்துகொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கனகராஜ் மாணவன் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலீஸாரின் இதுவரையான நடவடிக்கை பற்றிய அறிக்கை ஒன்றை கோரவுள்ளதாகவும், தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தில் பொலீஸாரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் எனவே தாம் பொலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கையினை பெறுவதோடு, மாணவனின் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவோம் என்றும் குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb