எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல்களாக மாறவேண்டும் – கிளிநொச்சி மாணவர்களுக்கு திலகராஜ் எம்பி அறிவுரை

இந்தக் காட்டிலுள்ள எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல்களாக மாறவேண்டும். 1983 ஆம் ஆண்டு இந்தக் காட்டில்  இருந்த  மூங்கில்களில்  ஒன்று  இன்று உங்கள் முன் புல்லாங்குழலாக நிற்கிறது. எனவே இன்று இந்தக்காட்டில் உள்ள எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல்களாக மாறவேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
 புதன் கிழமை (30-01-2019) கிளிநொச்சி  புனித திரேசா பெண்கள் கல்லூரியில்  இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வில் பிரத விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவி்கையில்
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் பழைய மாணவன் நான்.   அத்தோடு ஆறு பாடசாலைகளின் பழைய மாணவனும் கூட.  எனது மாதாந்த சம்பளத்தின் ஒரு பகுதியை கல்விக்கான உதவியாக செலுத்தி வருகிறேன்.   பாடசாலைகளுக்கும், மற்றும் மாணவர்களுக்குமாக இந் நிதி செலவு செய்யப்படுகிறது. எனவே எனது பாடசாலையான  புனித திரேசா பெண்கள் கல்லூரிக்கும்   உதவுகளைமேற்கொள்வேன்.
  அரசியல் ரீதியாக நான் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் பாராளுமன்ற உறுப்பினராக  நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ள முடியாது. ஆனால் வேறு வழிகளில் உதவிகளை மேற்கொள்ளமுடியும். குறிப்பாக  பிதரமர் அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது அமைச்சுக்களின் ஊடாக  இப் பாடசாலைக்கான உதவிகளை பெற நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்றும் தெரிவித்தார்
Share:

Author: theneeweb