சிறைச்சாலைக்கு ஹெரோயின் எடுத்து சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் 20 கிராமை எடுத்துக் கொண்டு வெலிக்கட சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க முயற்சித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது சந்தேகம் கொண்டு சிறைச்சாலை அதிகாரிகள் பிரதான நுழைவாயிலில் வைத்து சோதனை செய்த போது இந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த உத்தியோகத்தர் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவருடைய உபகரணங்களை வைத்திருந்த பெட்டகத்தை சோதனை செய்த போது 85,000 ரூபா பணமும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

Share:

Author: theneeweb