ஸ்ரீலங்காவின் ஜனநாயகம் சிதைக்கப்பட்டுள்ளது

எஸ்.ரட்னஜீவன் எச். ஹ_ல்

2016ல் ஸ்ரீலங்கா ஜனநாயகத்தின் எண்பத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடும்போது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி இடம்பெற்றுள்ளது,முதலில் பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த ஒரு பிரதம மந்திரிக்குப் பதிலாக பெரும்பான்மையை திரட்ட முடியாத ஒருவரை பிரதமாராக நியமித்தது, அதைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கு முரணாகப் பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஒரு நகர்வும் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றமும் மற்றும் நீதித்துறையும் உறுதியாக நின்றபோதிலும் இந்த நகர்வுகள் ஸ்ரீலங்காவை மிகவும் மோசமாகச் சேதப்படுத்தியது. ‘த எகானமிஸ்ட்’ பத்திரிகையின் புலனாய்வுபிரிவு 165 நாடுகளில் தோல்வியுற்ற ஜனநாயகம் நிலவும் 55 நாடுகளில் ஒன்றாகச் ஸ்ரீலங்காவைத் தரப்படுத்தியுள்ளது.

ஜனநாயகம் சிறுபான்மையினரின் உரிமைகளுடன் கரம் கோர்த்துச் செயற்படுகிறது. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை முழுமையாக ஸ்ரீலங்காவாசிகள் என்று சிங்கள மக்கள் அங்கீகரிக்க வேண்டும், இல்லையெனில் ஜனநாயகம் எங்கள் அனைவரையும் ஒதுக்கித் தள்ளிவிடும். இனவாதத்தின் முக்கிய தலைவரான ஞ}னசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் புதிய நகர்வுகள் சிறுபான்மையினரின் முதுகுத்தண்டுகளை அச்சத்தில் விறைக்க வைக்கின்றன. கொழும்பு ரெலிகிராப் செய்தியின்படி, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா சுதந்திர தினத்தில் இந்த வில்லத்தனமான தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என்று முன்னறிவிப்பு செய்துள்ள அதேவேளை ராமண்ணா நிக்காய, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல,கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகி தர்ம மகா சங்க சபா, அஸ்கிரிய பீட சியாம் நிக்காய மகாநாயக்க மல்வத்த பீட சியாம் நாயக்க மகாநாயக்க ஆகியோரின் ஆதரவுக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

“இந்த மனிதர்கள் பௌத்த விசுவாசத்தை வழிநடத்துவதற்குப் பொருத்தமானவர்களா?” என்று அனைத்து சிங்களப் பௌத்தர்களும் கேட்க வேண்டும்.”பெப்ரவரி 4ல் எந்தவிதமான சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம், எங்களைத் துன்புறுத்தும் ஒரு மனிதர் விடுதலை செய்யப்படுகிறார் ஏனென்றால் அவர் ஒரு தேசியப் பொக்கிஷம் என்று பொதுபலசேனா சொல்கிறது” என்று அனைத்துச் சிறுபான்மையினரும் கேட்க வேண்டும்.

சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனனை மேற்கோள் காட்டி கொழும்பு ரெலிகிராப் குறிப்பிடுவது, “மங்கள சமரவீர, மனோகணேசன், மற்றும் ஹர்ஷா டீ சில்வா போன்றவர்களை அமைச்சரவையில் கொண்டுள்ள ஒரு சுயாதீனமான, தாராளவாத, சீர்திருத்த அரசாங்கம் கூட குறிப்பிடுவது, தீவிரமான தடைகள் இன்றி ஞ}னசார தேரருக்கு மன்னிப்ப கிடைப்பதை அனுமதிக்காவிட்டால் வரப்போகும் வருடங்களில் நாட்டில் பதட்டமும், வன்முறையும் மற்றும் உறுதியற்ற தன்மையும் ஏற்படலாம்” என்று. இந்த மனிதருக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம் ஜனாதிபதி விரும்புவது இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

எங்களது தேர்தல் ஆணையகம் ஜனநாயகத்தை சிதைக்கும் நகர்வுகள் மற்றும் சிறுபான்மையினரை இலக்குவைக்கும் அபாயகரமான மனிதர்கள் ஆகியோருக்கு எதிரான ஒரு அரணாகக் கருதப்படுகிறது. 2015ல் தமிழர்களும் மற்றும் முஸ்லிம்களும் தகர்க்கப்பட்ட சட்டத்தின் ஆட்சியை மீளமைப்பதற்கு தோளோடு தோள்கொடுத்து நின்றார்கள். சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்கும் செயற்பாடு மோசமாக முறியடிக்கப் பட்டதினால் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் இனவாதிகளின் கூட்டத்தின் கீழ்த்தரமான இச்சைக்காக தேர்தலை கையாளத் தயாராக இருந்தார். அதற்குத் தேவைப்பட்டது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் உடைத்து சிறுபான்மையினர் மத்தியில் இருண்ட இனவாத சக்திகளை செயல்பட வைப்பது.

ஆகவே  யுத்த வருடங்களில் பிரிவினை ஊக்கப்படுத்தப்பட்டு வந்த கிழக்கு மாகாணத்திற்கு தமிழர்களும் மற்றும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைவது அவசரத் தேவையாக இருந்தது இதற்கு மாறாக ஜனாதிபதி எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்தார். 2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவோடு போட்டியிட்ட ஹிஸ்புல்லாவினால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியவில்லை, சிறிசேனவின் பக்கம் மாறியதால் தெரிவுப் பட்டியல் ஊடாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். அவரைப் பின்பற்றுபவாகள் அடுத்தமுறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும்.

‘கொழும்பு ருடே’ பத்திரிகைச் செய்தியின்படி, இந்து காளி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை முஸ்லிம்களின் மீன் சந்தைக்காக எடுத்துக்கொண்டதாக ஹிஸ்புல்லா பெருமை பாராட்டுகிறார். அந்தக் குரல் பதிவின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

“அந்த நிலம் ஒரு இந்துக்கோவிலுக்குச் சொந்தமாக இருந்தது. அதைக் கையகப் படுத்துவதில் பல பிரச்சினைகள் இருந்தன. இந்த நிலத்தை பெறுவதில் நான் தோல்வி அடைந்திருந்தால், இந்துக்கள் ஓட்டமாவடி நகரில் ஒரு கோவிலைக் கட்டியிருப்பார்கள். இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் எனது சேவையை மறந்துவிடக்கூடாது. அந்த நேரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராஜசிங்கம் அந்த நிலத்தைக் கைப்பற்றும் எனது முயற்சிக்கு எதிராகப் போராடினார். ஆனால் நான் மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக இருந்தபடியால் எனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தைச் சுவீகரித்து ஓட்டமாவடி மசூதியிடம் கையளித்தேன். கோவில் நிலத்தில் சந்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியதும் நானே மற்றும் நான் கட்டிய சந்தையில் உள்ள கடைகளை எங்கள் முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளித்தேன்”.

இந்த ஆளுனருக்கு எதிராக கடந்த 25ல் ஒரு முழு ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஜனவரி 23 -24 திகதிகளில் நான் காத்தான்குடிக்கு விஜயம் செய்யவேண்டி இருந்தது, நான் கடந்து வந்த இடங்களில் ஏறாவூர் போன்ற முஸ்லிம் நகரங்களில் கூட இந்தக் கடையடைப்பு எப்படி முற்றாக இடம்பெற்றது என்பதை தனிப்பட்ட முறையில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு புறக்கணிப்பு முயற்சி தோல்வியடைந்திருந்தது ஏனென்றால் காவல்துறையினர் சென்று கடைகளை மூட வேண்டாம் என்று வியாபாரிகளை எச்சரிக்கை செய்திருந்தார்கள். செய்தி அறிக்கைகள் தெரிவிப்பது ஐதேக வைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ரவிப்பிள்ளை மோகன் இந்த முறை அதை முறையாகச் செய்திருந்தாராம் மற்றும் காவல்துறையினர் அவரைத் தேடி வருகிறார்களாம்.

கிழக்கு மாகாணசபையின் காலம் முடிவடைந்துவிட்டது, ஆளுனர் அதை நடத்தி வருகிறார், இந்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் நியாயமாக நடைபெறுமா? சந்தேகம்தான், கிழக்கிலிருந்து தெரிவான மூன்று அமைச்சர்களும் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து இது தெரியும். 2015 ஆகஸட்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லா ஒரு பெரிய பெண்கள் மாநாட்டை நடத்தினார், அதில் பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் உணவுப் பொதி, ஒரு குவளை மற்றும் இதர ஞ}பகார்த்த பொருட்கள் கொண்ட ஒரு பை வழங்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் தலையிட்டு பகிர்ந்தளிக்கப்பட்ட பைகளில் ஒன்றை சாட்சிக்காக எடுத்துக் கொண்டார்கள். காவல்துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டு அந்தப் பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் துறையினர் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால், கொழும்பைச் சேர்ந்த சிங்கள தேர்தல் அதிகாரிகள் (எங்கள் ஜனநாயகத்தில் தமிழ் அதிகாரிகளைக் காட்டிலும் காவல்துறையினரின் விடயத்தில் அவர்கள் மிகவும் திறமையானவாகள்) தலையிட்டதால் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் ஆதாரங்களைத் தனிப்பட்ட முறையில் கையளித்த தேர்தல் அதிகாரிக்கு காவல்துறை, அந்த உபகரணங்கள் விநியோகிக்கப் பட்டதுக்கு சாட்சிகள் எதுவும் இல்லை என்று அக்கறையற்ற விதத்தில் எழுத்து மூலமாக அறிவித்தது. விடயம் அத்துடன் முடிந்தது.

காவல்துறையினரின் செயலற்ற தன்மைகள் இன்னும் அதிகம் உள்ளன. 10.2.2018ல் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில், ஒரு பிரச்சாரக் கூட்டம் இரவு 11.30 வரை நீண்டு கொண்டு போனது. தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்பட்ட விதிகளின்படி 11.00 மணிக்குப் பின் கூட்டம் நடத்துவது, வீதிகளில் கட்சியுடன் பிரச்சாரம் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி போன்றோர் மேடையில் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. தேர்தல் அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட காவல்துறையினருடன் அங்கு சென்றபோது கூட்டம் முடிந்துவிட்டது. ஹிஸ்புல்லாவினால் ஊக்கப்படுத்தப்பட்ட மனிதரான அஸ்பர் காத்தான்குடி நகரசபையின் தலைவராகத் தெரிவானார்.

எப்படியாயனும் வழக்கு எதுவும் தொடரப்படவில்லை. ஏன்? இந்த தேர்தல் ஆணையகத்தின் விதிகள் எதற்கும் வீரியமோ மற்றும் சாரமோ கிடையாது. அது எதனாலென்றால் எங்கள் விதிகள் எதுவும் சட்டத்தினால் கட்டாயப்படுத்தப்படவில்லை. அது வடிவமைக்கப்பட்டிருப்பது ஆணையம் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் முழுமையான ஆர்வம் கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காகவே. யதார்த்தத்தில் தேர்தலுக்கு புதியதான – அதாவது சிறிய மற்றும் புதிய கட்சிகள் எங்கள் விதிகளுக்குக் கீழ்படிகின்றன, அதேவேளை அனுபவமுள்ள வீரர்கள் குற்றம் சுமத்த முடியாதபடி கவனித்துக் கொள்கிறார்கள்.

மிகவும் அனுபவமுள்ள கட்சிகள், உண்மையான மீறல்களைக் கூட சமாளித்து விடுவார்கள். உதாரணத்துக்கு ஒரு ஏழுத்துமூலமான புகாரை நான் பின்தொடர்ந்ததில், பிரதி அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் உள்ளுராட்சித் தேர்தலின்போது ஒரு கோவிலில் தேர்தல் கூட்டம் நடத்துவதை நான் கண்டேன். அதைப் புகைப்படங்கள் எடுத்து நடவடிக்கைக்காக அழுத்தம் கொடுத்தேன். எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து வலியுறுத்தியபோது அது தேர்தல்காலத்திற்கு அப்பால் நடைபெற்றது என்று சொல்லப்பட்டது. நான் கோப்புக்களைத் தருவித்து அது சரியாகத் தேர்தலின் நடுப்பகுதியில் இடம்பெற்றது என்று காண்பித்தேன். பின்னர் ஆணையகம் நடவடிக்கை எடுப்பதற்காக அந்தக் கோப்பை அனுப்புவதாக ஏற்றுக்கொண்டது. இன்று சில மாதங்கள் கழிந்த பின்னரும் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. இதேபோல ஐதேக பௌத்த கோவில்கள் அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபா வழங்குவதாக வாக்குறுதி வழங்கியது. ரெலோ சிவாஜிலிங்கம் இதுபற்றி எழுத்து மூல புகார் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன் செயற்பாடற்ற தன்மை பற்றி நான் கவலை தெரிவித்த போது, இதற்கு எழுத்துமூலமான ஒரு புகார் தேவை என்று எனக்குச் சொல்லப்பட்டது. நான் அந்தப் புகாரின் பிரதி ஒன்றைச் சமர்ப்பித்தபோது, பௌத்தம் அரசின் ஆதரவானதாக அரசியலமைப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது, இந்த நடத்தையை ஒரு தேர்தல் குற்றமாகக் கருதுவது பௌத்த மதத்துக்கு பொருந்துமா என்பது பற்றி நாம் மேலும் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஒரு ஜனநாயகம் என்ற வகையில் நாம் தோல்வியடையக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவத்காக இந்த விவகாரங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

முந்தைய ஒற்றைய தேர்தல் ஆணையருக்குப் பதிலாக மூன்று பேரைக் கொண்டதேர்தல் ஆணையம் 19ம் திருத்தத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டது. எனது கணக்கிட்டீன்படி, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதால் பத்தொன்பதாம் திருத்தத்தின் அந்தப் பகுதியை தோல்வியடைந்த ஒன்றாகவே கருதவேண்டும். விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தலைவரை மட்டும் அழைப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் மூன்று ஆணையாளர்களையும் சந்தித்து அவர்களுடன் ஒருமித்து பேசுவதற்காக ஏன் காத்திருக்க முடியாது என்பதற்கு எந்தவித அவசியமான காரணமோ அல்லது அவசரமோ கிடையாது. இதற்கு ஒரு உதாரணமாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் சாச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்குச் சற்று முன்னர், தேர்தல் ஆணையகத் தலைவர் இரவு திடீரென ஜனாதிபதியை சந்திக்கும்படி கேட்கப்பட்டார். மறுநாள் வெளியான அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யவேண்டிய திகதி, தேர்தல் நடக்கவேண்டிய திகதி போன்றவற்றை அவரே வரைவு செய்து கொடுத்திருப்பதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்புகிறார்கள், சட்டவிதிகளின்படி பாராளுமன்ற தேர்தல் சட்டம் பற்றிய அனுபவமுள்ள ஒருவராலேயே அதைச் செய்ய முடியும். மறுபுறத்தில் தலைவர் மகிந்த தேசப்பிரிய, தான் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்லும்போதே அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்படுவதற்காக வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் இருந்தது என்றும் தேர்தல் சட்டத்தை வாசிக்கும் எவராலும் திகதிகளை அமைக்க முடியும் எனக் கூறுகிறார். நான் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் தேர்தல்களுக்கு பொறுப்பாக மூன்று பேரைக்கொண்ட ஒரு தேர்தல் ஆணையம் இருப்பதற்கு எதிரான பாரபட்சமான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும் அல்லவ? ஆணையத்தை சந்தேகத்துக்கு அப்பால் வைத்திருக்க வேண்டும் அல்லவா? நாங்கள் மூன்று பேரும் அங்கு இருந்திருந்தால் இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடரமுடியாது.

இதற்கு முரண்பாடாக, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்தில் ஆடம்பரமான விருந்துடன் மற்றும் அழகியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சாவ் நடனக்குழுவின் நடனங்களுடன் நடைபெற்ற இந்திய குடியரசுதினக் கொண்டாட்டங்களில் கலந்துவிட்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன்,அங்கு சிறிசேனவினால் புதிதாக நியமனம் பெற்ற ஆளுனரான கலாநிதி.சுரேன் ராகவன் அவர்கள்தான் பிரதம விருந்தினராக இருந்தார். அவர் ஒரு தமிழ் பௌத்தர் எனவே யாழ்ப்பாண மக்கள் அவர் சுயநலனுக்காக கீழ்படிந்து நடக்கிறார் என்று சொல்லக்கூடும்.

எங்கள் புராண காவியமான மணிமேகலையின் காலத்தில் (கி.மு 3ம் – 5;ம் நூற்றாண்டுகளில்) தமிழர்களாகிய நாங்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் பௌத்தம் என்பது எப்போதுமே கெட்டவார்த்தை அல்ல. சிங்கள மொழி இல்லாத ஒரு காலத்தில் சிங்களவர்களுடையது என்று கூறப்படும் பல பௌத்த நினைவுச்சின்னங்கள் தமிழர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும்.

ராகவன் தனது உரையை முறையான தமிழில் வழங்கினார். அவர் இந்தியா வெறுமே நம்முடைய அயலவர் மட்டுமல்ல ஆனால் ஒரு நாகரிகம், நமக்கு ஒரு கூடாரம். 13வது திருத்தத்தின் ஊடாக எங்கள் சுதந்திரம் விரிவடைந்தது அதற்காக இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். எங்கள் நீண்ட பயணம் முன்னாலுள்ளது நாங்கள் மெதுவாக நடக்க வேண்டும் என்று சொல்வதற்கு அவர் சோக்கிரட்டீசை மேற்கோள்; காட்டினார். ராகவனின் நியமனம் நல்ல ஒன்றாகவே தெரிகிறது.

இன்று கிழக்கு கொதிக்கிறது. நாயாறு – நீராவியடியில் உள்ள ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டு ஒரு பௌத்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் அங்கு ஒரு பௌத்த ஆலயம் ஒருபோதும் இருந்ததில்லை என்று நீதிமன்றில் கூறியுள்ளார், ஆனால் தொல்பொருளியல் திணைக்களம்( இதை நான் நம்பவில்லை ஏனென்றால் அதன் பாத்திரம் குடியேற்றம் செய்வதுதான்) வேறுவிதமாகச் சொல்கிறது. நீதிமன்ற விசாரணை 24ல் நடைபெற இருந்தது ஆகவே காவல்துறை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரின் துணையோடு தொல்பொருளியல் திணைக்களம் விரைவாக ஒரு பௌத்த கோவிலை 23ந்திகதி நிர்மாணித்து முடித்துவிட்டது என்று 24.01.2019 வீரகேசரிச் செய்தி கூறுகிறது. கிழக்கில் கொதிக்கும் கொப்பரைக்கு ராகவனால் நிறைய பங்களிப்பு செய்ய முடியும்

இந்த ஆண்டு தேர்தல் வரும்போது ஒரு ஆளுனர் என்கிற வகையில் ஹிஸ்புல்லா காவல்துறைமீது செல்வாக்கு செலுத்துவதுடன் அனைத்து மாகாண வசதிகளுக்கும் பொறுப்பாக எப்படி பொறுப்பாக இருக்கப் போகிறார்? தேர்தல் ஆணையம் வாக்களிப்பது உங்கள் உரிமை என்று வெறுமே ஒப்புக்கு கோஷம் போடுவதை விடுத்து சட்டத்தை உறுதிப்படுத்த துணிவுடன் செயல்படுமா இருப்பினும் நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் ஜனநாயகத்தின்மீது எந்த உறுதிப்பாட்டையும் காண்பிக்காதபோது அந்த வாக்களிக்கும் உரிமை கூட உறுதியான ஆதாயம் இல்லாத ஒன்றாகிவிடுகிறது.

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்து ஏமாற்ற முயன்றபோது அது நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டது, அப்போது முதல் ஹிஸ்புல்லா போன்றவர்களின் நியமனத்தின் மூலம் சட்டத்தை மீறாமல் எமாற்றுவது எப்படி என்கிற தந்திரத்தை ஜனாதிபதி; கற்றுக்கொண்டுள்ளார் என்று பலரும் சொல்கிறார்கள். மற்றும் எல்லாவற்றிற்கும் நன்கு பொருத்தமானவர் என்று நான் நினைக்கும் ராகவன் இதில் எங்கு நிற்கிறார்?

Share:

Author: theneeweb