மன்னாரில் உரிமையாளரற்ற 529 கிலோ புகையிலை மீட்பு

மன்னார், நூர் வீதியில் புகையிலை கிலோ கிராம் 529 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

இந்த புகையிலை தொகை ஒரு லொரி வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிலை பொதியை கொண்டு சென்ற லொரி வண்டியை மன்னார் ஜும்மா பள்ளி வாசல் அருகில் விடப்பட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலதிக விசாரனைகள் மன்னார் பொலிஸார் மேற்கொள்ளப்படுகிறது.

Share:

Author: theneeweb