நடேசனின்எக்ஸைல்: விடுதலைபற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒருஎழுத்து முயற்சி

—   மகேந்திரன் திருவரங்கன் ….

இன்னும் நான்குமாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில்யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகி விடும். இந்தயுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம்இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற்பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளைவழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், ஏமாற்றியும் வருகிறது.

இந்தயுத்தம் பொருளாதார ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் குறிப்பாக வடக்குக்கிழக்கிலே வாழும் சமூகங்களை மோசமாகப் பாதித்திருக்கிறது. மண்மீட்பு என்ற கோசத்துடனும், தேசியவிடுதலை என்றவேட்கையுடன் ஆரம்பித்த போராட்டத்தின் துர்பாக்கியமான விளைவுகளிலே சிலவாகமக்கள் ஏற்கனவே தம்மிடம் இருந்த காணிகளை சிங்களதேசியவாத அரசியலுக்கு அரணாக அமையும் இலங்கை இராணுவத்திடம் பறிகொடுத்ததும், தமிழ்மக்களின் மத்தியிலே கருத்துக்களை வெளியிடுவது தொடர்பிலே உளவியல்ரீதியிலான ஒருசமூகஅச்சம் உருவாகியமையும், இனமுரண்கள் மேலும் கூர்மையடைந்தமையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் அமைந்தன.

 

போராட்டத்துக்கு முன்பிருந்த சிங்கள பௌத்த அரசகட்டமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. வடக்கில் போருக்குப் பின்னர் இடம்பெற்றுவரும் அரசஆதரவுடனான வலிந்தபௌத்தமயமாக்கம் சிலவகைகளில் அதனது கோரத்தன்மை மேலும்அதிகரித்தும் இருக்கிறதனையே எமக்குக்காட்டுகிறது.
தமிழர்கள் மத்தியில் ஆயுதப்போராட்டத்துடன் இணைந்தவகையில் விடுதலைகோரி இயங்கிய இயக்கங்களினால் உருவாக்கப்பட்ட இராணுவமயமாக்கமும், அது ஏற்படுத்திய ஜனநாயகமறுப்பும், சமூகத்தின் சிந்தனைப்போக்கினைப் பொதுவெளியிலே உறைந்துபோகச் செய்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக போரினைநேரடியாக எதிர்கொண்ட சமூகங்கள் கடுமையான பொருளாதாரப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அரசினது மீள்கட்டுமாணப்பணிகளின் தோல்வியும், என். ஜீ. ஓக்களினைமையமாகக் கொண்ட அபிவிருத்தி முயற்சிகளின் தொலைநோக்கற்ற, கட்டமைப்பு சார்மாற்றங்களை ஏற்படுத்தமுடியாத பார்வையும், இன்று போரினால் பாதிப்புற்ற சமூகங்கள் நுண்நிதிக்கம்பனிகளின் பிடியில் அகப்பட்டுப்போவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்தரீதியிலே போருக்குப் பின்உருவாகும் எழுத்துக்களின் பணி என்னவாக இருக்கப்போகிறது என்றகேள்வி எழுகிறது இந்தஎழுத்துக்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லவரும் செய்தி என்ன?
இவற்றின் வரலாற்றுப்பங்கு எத்தகையது? கடந்தகாலத்துக்கும், நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையில் இவை எவ்வாறான ஊடாட்டங்களை ஏற்படுத்துகின்றன?

 

போருக்குப் பின்னைய காலத்திலே வடக்குக்கிழக்கிலும் அதற்கு வெளியிலும்

தமிழ்மக்கள் போரின்போது தாம்அடைந்த இழப்புக்களையும் அடக்குமுறைகளையும் பற்றித் மதுநாளாந்தவாழ்க்கையில் பன்மையானமுறைகளிலே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடல்கள் புலிகள்உள்ளடங்கலாக எல்லாவிதமானஅ திகாரமையங்களினாலும் இழைக்கப்பட்ட ஜனநாயகவிரோத, விடுதலை விரோதச் செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துவனவாகவே அமைகின்றன. ஆனால் பொதுவெளியில் தமிழ்த்தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் உரையாடல்களிலும், நினைவு கூரல்களிலும், வரலாற்று உருவாக்கச் செயன்முறைகளிலும் சமூகத்தின் கீழ்மட்டங்களில் அவதானிக்கப்படும் நுணுக்கமான வெளிப்பாடுகளுக்கும், பன்மைத்துவக் குரல்கள்களுக்கும் உரியஇடம் கிடைப்பதில்லை. அரசியற்கட்சிகளாக இருந்தாலும்சரி, பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்த அமைப்புக்களும்சரி, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலான மதமற்றும் சமூகத்தலைவர்களையும்,பல்துறைகளிலும்பணியாற்றுவோரினையும்உள்ளடக்கிய சிவில்சமூகக்குழுக்களும் சரி, தொழிற்சங்கங்களாகஇ ருந்தாலும் சரி, வடக்குக் கிழக்கின் தமிழ்ப் பொதுவெளியில் செயற்படும்

 

முக்கியமானதரப்புக்களிலே, ஒருசில தனித்தகுரல்களைத் தவிர, கடந்தகாலம் பற்றிய உரையாடல்களைத் திறந்தமனத்துடன் உரையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே தொடர்ந்தும் இருக்கின்றன. ஆதிக்கத் தமிழ்த்தேசியவாத நிலைக்கு மாற்றாகவும், புலிகளின் அரசியலில் அவதானிக்கப்பட்ட பாசிசக்கூறுகளை விமர்சிப்பனவாகவும் அமையும் கலை,
இலக்கியப்படைப்புக்களினைத் தடைசெய்வதிலும், அவற்றுக்கு எதிராக வன்மம் மிக்க பிரசாரங்களை மேற்கொள்வதிலுமே எமது புத்திஜீவிகளிலே பெரும்பாலானோர் ஆர்வமாகஇருக்கிறார்கள். கடந்தஆண்டிலே இடம்பெற்ற யாழ்ப்பாணத்திரைப்படவிழாவிலே ஜூட் இரத்தினத்தின் டீமன்ஸ் இன்பரடைஸ் (Demons in Paradise)என்ற படத்தினை நீக்குவதற்குஎLக்கப்பட்ட முடிவு சமூகப் பொதுவெளிகளைத் தமதுகட்டுப்பாட்டிலேவை த்திருக்கும் புலமைசார் மற்றும் மேற்தட்டுவர்க்கத்தினரின் ஆதிக்க அரசியலுக்கு ஒருஎடுத்துக்காட்டு.
வெவ்வேறு தமிழ்விடுதலை இயக்கங்களின் ஒத்துழைப்பின் மூலமாகத் தமிழ்நாட்டிலே உருவாகியதமிழர்மருத்துவ நிலையத்திலேதான் பணி புரிந்தநாட்களிலே இடம்பெற்ற சம்பவங்களினதும், அந்தநாட்களிலேதான் பெற்றுக்கொண்ட அனுபவங்களினதும் அடிப்படையில் எழுதப்பட்ட நினைவுமீட்டல் புத்தகமாக அண்மையில் வெளிவந்த நோயல்நடேசனின் எக்ஸைல் என்றநூல் அமைகிறது. இயக்கங்களினது ஜனநாயகமறுப்பு அரசியல் காரணமாகஅவற்றுடன் பொதுநோக்கங்களுக்காகவும், சமூகமாற்றத்துக்காகவும், அரசியல் விடுதலையின் பொருட்டும் இணைந்து செயற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்டநம்பிக்கையீனத்தினையும், விரக்தியினையும் இந்தநூல் உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது. இது சிவில்யுத்தம்தொடர்பாகத் தமிழர்தரப்பின் மத்தியில் பெரிதும் பேசப்படாத சிலபக்கங்களைப் பேசும்ஒருநூல். செய்திப்பத்திரிகைகளிலும், தமிழ்த்தேசியகருத்துருவாக்கிகளின் பத்திகளிலும் வெளிவராத சில உண்மைகளையும், நினைவுகளையும், சம்பவங்களையும் இந்தப்புத்தகத்தில் இருந்துநாம் வாசித்தறியக் கூடியதாக இருந்தது.

 

ஆயுதப் போராட்டகாலங்களில் நாடுகடந்தநிலையில் இடம்பெற்ற வன்முறைகள்பற்றி இந்தநூல் பல செய்திகளையும், குறிப்புக்களையும் தாங்கியதாக உள்ளது. தமிழ்த்தேசத்தினை மையமாகக் கொண்ட வன்முறைக்குத்தேசங் கடந்த ஒருபரிமாணமும் இருக்கிறது என்பதனைச் சொல்லும் ஒருநூலாகஎக்ஸைல் அமைகிறது.
தேசம்கதைகளிலே வாழ்வதாக ஹோமிபாபா என்றபின் காலனிய சிந்தனையாளர் குறிப்பிடுவார். தேசத்தின் கதைகளினைக் குறுகிய தேசியவாதம் எப்போதுமே தூய்மைப்படுத்தித் தனக்கு அசௌகரிய மானவற்றினை பிரித்துநீக்கியே பெரும்பாலும் சொல்லமுற்படுகிறது.
அவ்வாறு தேசியவாதம் தன்னை வெளிப்படுத்தும்போது ஏற்படும் அறிவுசார் வன்முறை சமூகத்தின் அரசியல்பிரக்ஞையின் மீதானஒரு வன்முறையாகவும், பன்மைத்துவம், விடுதலைமற்றும் நீதிக்கானகுரல்களின் மீதான ஒருவன்முறையாகவும் அமைகிறது. தேசத்தின் உள்ளிருக்கும் முரண்கள், அதன்மையத்துக்கும், விளிம்புக்கும் இடையில்இருக்கும் உறவுகள், தேசத்தின் எல்லைக்கோட்டின் வெளியில் இருப்போருக்கும் அதன் உள்ளிருப்போருக்கும் இடையிலான கதைகள்போன்றன வெளிக்கிளம்பும்போதே தேசியவாதத்தின், தேசத்தின்பேரில் இடம்பெறும்வன்முறைகள் வெளிவருகின்றன. இதுவே விடுதலைபற்றி நாம் மீளவும் புதியமுறையில் சிந்திக்க எம்மைத்தூண்டும். நோயல்நடேசனின் நினைவுப்பதிவுகள் தனியே அவரினது ஞாபகங்களின் தொகுப்பல்ல; அவை தேசத்தினைப் பற்றிய பதிவுகள்; எம்மத்தியிலே இருக்கும் தேசச்சிந்தனையின் போதாமைகளை வெளிக்கொண்டு வரும் விளிம்பில் இருந்து, அல்லது தேசத்தின் வெளியில் இருந்து தேசத்தினை நோக்கும் வகையிலாக, எம்மைச் சிந்திக்கத்தூண்டும் பதிவுகள். நாம் எமது வேறுபட்ட அனுபவங்களுடன், வேறுபட்ட நினைவுகளுடன், பன்மைத்துவத்தினை சிதைக்காத முறையில் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் மக்கள்மைய அரசியல் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு எக்ஸைல் போன்ற பதிவுகளின் வாயிலாக வெளிப்படும் உண்மைகளும், உரையாடல்களும் முக்கியமானவை. இவை உண்மை, நீதி, நல்லிணக்கம் போன்ற செயன்முறைகள் வெவ்வேறு இனங்களுக்கு இடையில்மாத்திரமல்ல, கடந்தகால உள்ளக வன்முறையினால் பிளவுற்றுப் போயிருக்கும் jkpழ்மக்கள் kத்தியிலும் கூட இடம் பெறவேண்டும் என்பதனை அடிக்கோடிட்டுச் சொல்லுகின்றன.

 

விடுதலைப்போராட்ட இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்டபடுகொலைகள் பற்றி ழுதும் நடேசன் உண்மைக்கானதேடல் என்பதனை நாம் கொலையாளிக்கும் அவர்சார்ந்த அமைப்புக்கும் தண்டனைவழங்குவதற்கான ஒருசெயன்முறையாகக் குறுக்கிவிடக்கூடாது என்பதனை வலியுறுத்துகிறார்; மாறாக இதனைபொறுப்புக்கூறலுடன் தொடர்பான செயன்முறையாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையினை அறிவதற்கான ஒருசந்தர்ப்பமாகவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு முயற்சியாகவும் நடேசன் காண்கிறார்.
ஈ-பி-ஆர்-எல்-எஃப்உள்ளடங்கலாக வெவ்வேறு இயக்கங்களில் அவதானிக்கப்பட்டஇனவெறிஉணர்வுகளைஇந்தநூல்வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது. தமிழகத்திலே மலையாளி ஒருவரினைஈ-பி-ஆர்-எல்-எஃப்இயக்கத்தினர் சிங்களவர்எனக்கருதி எவ்வாறுதாக்கினர் என்பதனை நடேசன்வேதனையுடன் விபரிக்கிறார். இவ்வாறானஇனவெறிஇயக்கங்களில் இருந்துவெளிப்பட்ட அவற்றுக்கே உரித்தானஒருஅகவயமான வெறிஅல்ல; இந்தஇனவெறிக்கானசமூகப் பொருளாதா ரத்தளம் ஒன்று இருக்கின்றது என்பதனை நூல்எடுத்துக்காட்டுகிறது.

(தொடரும்)

Share:

Author: theneeweb