கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரி மரதன் ஒட்டம்

மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் உன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனதின் பணியாளர்கள் இன்று கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரும் வழிப்புணர்வு மரதன் ஒட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் பிரதேசமான முகமாலையில் ஆரம்பமான நிதி கோரும் விழிப்புணர்வு ஓட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அலுவலகத்தில் நிறைவுற்றது.

இதில் கண்ணி வெடி அகற்றும் பெண்கள் ஆண்கள் என சிலர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb