நடேசனின்எக்ஸைல்: விடுதலைபற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி (2)

மகேந்திரன்திருவரங்கன்—-

 

வடஅமெரிக்காவில் இருந்து வந்தசிலபுலம்பெயர் தமிழர்கள் தாம் ஒருதொகைப்பணத்தினை வைத்திருப்பதாகவும், எந்தஇயக்கம் கொழும்பிலே ஒரு குண்டுத்தாக்குதலினை மேற்கொள்வார்களோ அவர்களுக்கே அந்தப்பணத்தினைத்தாம் வழங்குவோம் என சென்னையிலே வைத்துத் தம்மைச் சந்தித்தோரிடம் அவர்கள் சொன்ன விடயத்தினையு சிக்கும்போது எமது விடுதலையின் இலக்குகள் எவ்வாறு சமூகத்தினைச் சேர்ந்த பணபலம் மிக்கவர்களினால் மாற்றியமைக்கப்பட்டன என்பதனை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. ஏனைய இனத்தவர் மத்தியிலே எமதுபோராட்டம் பற்றிய நம்பிக்கையி னை நாம் கட்டியெழுப்புவதற்கு எமது சமூகத்திலே பலம்படைத்தவர்கள் எவ்வாறு இயக்கங்களைத் தடுத்திருக்கிறார்கள் என்பதனை நாம் இங்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதேவேளையிலே புலம்பெயர்சமூகங்களினைச் சேர்ந்தவர்களிடம் அவதானிக்கப்படும் இனவாதத்துக்கு அவர்கள் முன்னர் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட முறைகளும், வன்முறைகளும் கூடக்காரணங்களாக அமைகின்றன என்பதனையும் நடேசன் மற்றொரு இடத்திலே சுட்டிக்காட்டுகிறார்.

Dr. Nadesan (right) at the book launch in Colombo

இடதுசாரி நிலைப்பாடிலான தமிழ்அரசியல் செயல்பாட்டாளர்கள் அடிக்கடி கதைத்து வேதனைப்படும் ஒருவிடயம் சிங்களஇடதுசாரிக ள்எவ்வாறு பேரினவாதத்தினைத் தழுவி சிறுபான்மையினரையும், அவர்களது நீதிக்கான போராட்டங்களினையும் கைவிட்டார்கள் என்பது. இந்த நூலிலே ஒருபகுதியிலே நூல்ஆசிரியர் நடேசனுக்கும் சிங்களஇடதுசாரி செயற்பாட்டாளர் ஒருவருக்கும் இடையில் 1980களில் அநுராதபுரத்திலே சிங்களவர்மீது புலிகள் மேற்கொண்ட இனவெறித்தாக்குதல் பற்றிய ஒருசம்பாசணை இடம்பெறுகிறது. இந்தச் சம்பாசணையில் இருந்து நான் விளங்கிக் கொள்வது யாதெனில் 1980களிலும் அதற்குப் பின்னரும் சிங்களவர்களின் மத்தியில் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் பற்றிப் பேசிய ஒரு சில சிங்கள இடதுசாரிகளையும் தமிழ்மக்களும், தமிழ்மக்களின் சார்பிலே போராடியவர்களும் எவ்வாறு கைவிட்டோம் என்பதனை; நாம் எவ்வாறு சிங்கள் இடதுசாரி களை எமது வன்மம் மிக்கப் பதிலடிச் செயற்பாடுகளின் மூலமாக சிங்கள‌ சமூகத்தினைஎதிர்கொள்ளமுடியாதுசெய்தோம்என்பதனைப்பற்றியும், அவர்கள்தொடர்ந்தும் எமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைப்பதற்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டோம் என்பதனையும் போருக்குப் பிந்தைய காலத்திலே சிந்திக்கவேண்டியதன் அவசியத்தினை இந்த நூல் உணரவைக்கிறது.

அநுராதபுரப்படு கொலைகள் நோயல் நடேசன் தமிழ்இயக்கங்களின் ஆயுதப்போராட்டத்திலே நம்பிக்கை இழப்பதற்கும் காரணமாக அமைந்தன.
நடேசனின் அனுபவங்கள் தென்னிந்தியா தவிர இலங்கையில் அதிலும் தென்னிலங்கையிலே அவர் வாழ்ந்த காலத்திலே அவர் எதிர்கொண்ட சிங்கள‌ இனவாத நிகழ்ச்சிகள் பற்றியதாகவும் அமைகிறது. வடக்குக் கிழக்குக்கு வெளியிலே வாழும் தமிழர்கள் பற்றி எமதுதமிழ்த்தேசியவாத அரசியல் பெரிதாகச் சிந்தித்தது கிடையாது. சர்வதேசத்திடம் எமக்கு நீதிகேட்கும்போது நாம் எமது நீதிக்கான கோரிக்கைக்களுக்கு வலுச்சேர்க்கும் கறிவேப்பிலைகளாகவே நாம் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்கள் எதிர்கொண்ட இனவாதத்தினையும் பலசமயங்களிலே பயன்படுத்தி இருக்கிறோம். வடக்குக்கிழக்கினை மையமாகக் கொண்டு நாம் முன்வைக்கும் அரசியற்தீர்வுகளினால் வடக்குக்கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழருக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பது பற்றித் தேசியவாதம் பேசும் பெரும்பாலானோ ர்சிந்திப்பதில்லை. சிங்கள-பௌத்தத் தேசியவாதிகள் தீவு முழுவதும் தமது சமூகத்துக்கே உரியது என்ற மனநிலையிலே செயற்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியவாதிகளிலே பலர் வடக்குக்கிழக்கிலே தமிழ்த்தேசத்துக்கு மாத்திரமே சுயநிர்ணயஉரிமை இருக்கிறது எனச்சொல்லுகிறார்கள். இந்த இரண்டுதரப்புக்களுமே வடக்குக்கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக‌ இருப்பதற்கு உரியகட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவதற்குச் சார்பாகவே தமது கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைத்து வருகிறார்கள்.

னது அடையாளத்தினை மாற்றினால் ஒழியத் தென்னிலங்கையிலே நடேசனுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையினைச் சிங்களத்தேசியவாதம் உருவாக்குகிறது எனில், வடக்குக்கிழக்கினை மையமாகக் கொண்ட‌ தமிழ்த்தேசியவாதம் தென்னிலங்கையினைச் சிங்களதேசம் எனச் சொல்லிச் சொல்லியேஅ ந்தநிலைமை நீடிப்பதற்கு வழிசெய்கிறது என்பத‌னை நாம் நினைவில் நிறுத்துவது நல்லது. ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறுபான்மையாக வாழும்மக்கள் பற்றி எமக்கு இருக்கும் கரிசனையின்மை காரணமாகவே வடக்கிலே இருந்து முஸ்லிம்மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதனையும் இங்கு மீட்டிப்பார்ப்பது பொருத்தமானது.
ஆயுதப் போராட்டத்தின் வரலாறுதவிர, சிலோனினைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்துடன் சென்னையில் நடேசன் எதிர்கொண்ட அனுபவங்களினையும் சுவாரஸ்யமான முறையிலே எக்ஸைல் பதிவிடுகிறது. நடேசனின் நூலிலே தென்னிந்தியாவுக்கும், வடஇலங்கைக்கும் இடையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிலே இருந்த தொடர்புகள் குறித்தும், அரசுகளின் கண்காணிப்புக்களையும் மீறி மக்கள் வியாபார நிமித்தமும், தொழில் தேடியும் எவ்வாறு இருஇடங்களுக்கும் பயணம் செய்தார்கள் என்பது பற்றியும் விபரணம் மிக்க‌ முறையிலே சொல்லப்பட்டிருக்கிறது. காசியானந்தன் பிரபாகரன் மீது வைத்திருந்த அபரிமிதமான‌ ‘விசுவாசத்தினை’ நடேசன் நகைச்சுவைமிக்க முறையில் கூர்மையாக‌ விமர்சிக்கிறார்.

Image: Kittu(2nd from right ) with LTTE cadres in Jaffna.

ரெலோ இயக்கத்தினர் தம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் இருந்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இந்தியாவினைக் கோரிய போதும், அவர்களுக்கு எந்தப்பாதுகாப்பினையும் இந்தியா வழங்காமையினைச் சுட்டிக்காட்டும் எழுத்தாளர் அவ்வாறான ஒருநிலையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிலே சிலர் புலிகளையும் மக்களையும் 2009இல் இந்தியா காப்பாற்றும் எனநினைத்தமை ஒருமுரண் நகைஎன எழுதுகிறார். பிராந்திய வல்லரசு எமது போராட்டத்திலே ஏற்படுத்திய அழிவுகளையும், குழப்பங்களையும் விமர்சிக் கநடேசன் தவறவில்லை.

நடேசனின் அனுபவங்கள் தமிழ்ச்சூழலிலே நினைவுகூரல் செயற்பாடுகள் குறித்துமீளச் சிந்திப்பதற்கும், போரின் வடுக்களை ஒழிப்புமறைப்பின்றிப் பேசவும் எமக்கு அறிவுறுத்தவனவாக அமைகின்றன. போருக்குப் பிந்தைய இன்றைய காலப்பகுதியிலே தமிழ்மக்கள் எவ்வாறு ஏனைய சமூகங்களுடன் இணைந்து அரசினது இனவாதத்தினையும், புறமொதுக்கும் ஏனைய‌ தேசியவாதங்களையும் முறியடிக்கப்போகிறார்கள் என்பதுபற்றிச் சிந்திப்பதற்குத் தூண்டும் ஒருநூலாக எக்ஸைல் அமைகிறது. தேசியவாதங்களின் புறமொதுக்கும் போக்குகளில் இருந்தும், அரசினாலும் இயக்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட இராணுவமயமாக்கற் சூழலில் இருந்தும் எம்மை விடுவித்து, நாம் வாழுகின்ற பிரதேசங்களிலும், வேலைசெய்கின்ற பிரதேசங்களிலும், எமது அடையாளங்களும் நாமும் கௌரவமான முறையில் நடாத்தப்பட, நாம் எவ்வாறு போராடப் போகிறோம் என்பதனைத் தீர்மானிக்க எமக்குச் சிலபாதைகளைக் காட்டக்கூடிய ஒருநூலாகவே நான் நடேசனின் நூலினைப் பார்க்கிறேன். எமது போராட்டங்கள் எவ்வாறு எதிர்காலத்திலே இருக்கவேண்டும் என்று எந்தவிதந்துரைப்பினையும் இந்தநூல் வெளிப்படையாக‌ மேற்கொள்ளாவிடினும், இந்தநூலினை நாம் இன்றைய அரசியற் சூழலிலே எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம், அதிலிருந்து நாம் எதனைக் கற்றுக் கொள்ளப்போகிறோம் என்பதிலேயே இந்தநூலின் வரலாற்று வகிபாகம் தங்கியிருக்கும் என நான் நினைக்கிறேன். இவ்வாறான நூல்முயற்சிகள் ஆதிக்கச்சக்திகளினால் மறைக்கப்பட்ட வரலாறுகளை சமூகத்திடம் கொண்டு சென்று சேர்ப்பதுடன், எமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய மாற்று அரசியற் சிந்தனைகளைத் தோற்றுவிக்கக்கூடிய வல்லமை மிக்கனவாகவும் அமைகின்றன.

மகேந்திரன்திருவரங்கன்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலேஆங்கிலத்துறைவிரிவுரையாளராகப்பணிபுரிகிறார்.

Share:

Author: theneeweb