உயிரிழந்த இராணுவ வீரர்களின் பூதவுடல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2 வீரர்களினதும் பூதவுடல்கள் தாய்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மேஜர் எஸ்.டபிள்யூ.டீ. ஜயவிக்ரம, சர்ஜன் எஸ்.எஸ். விஜயகுமார ஆகியோரின் சடலங்கள் இராணுவ மரியாதையுடன் உரியவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஷ சேனநாயக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.

இறுதிக் கிரியைகள் இராணுவ மரியாதையுடன் இடம்பெறவிருப்பதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb