ஒரு நாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர சம்பவம்

நாயொன்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற செயல் கம்பஹா பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா – வத்துருகம – கந்தஹேன பகுதியில் நீண்ட காலமாக வீதியில் உலாவி கொண்டிருந்த நாய் மீதே இவ்வாறு இனந்தெரியாதவர்கள்,  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த குறித்த நாய், தெவலப்பொல கால்நடை மருத்துவ நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பத்தரமுல்லை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

எனினும் 10 மணி நேரமாக கடும் வேதனையை அனுபவித்த அந்த நாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதேபோன்று கூண்டொடு நாய் ஒன்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அண்மையில் நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்றிருந்தது.

பின்னர் அந்த நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb