எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல்

ஜெனிவா: எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதைக்கப்பட்டிருக்கும் மம்மிகளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன.

எகிப்தின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட மம்மிகள் கண்டறியப்பட்டன.

இந்த 40 மம்மிகளில் 12 மம்மிகள் சிறார்களுடையவை. 6 மம்மிகள் நாய் உள்ளிட்ட விலங்குகளுடையவை. மற்றவை ஆண் மற்றும் பெண்களுடையவை என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மம்மிகளில் சிலவை மண்ணில் அப்படியே கிடத்தப்பட்டுள்ளன. சில மம்மிகள் திறந்த சவப்பெட்டி போன்ற மண்ணால் ஆன பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 232ம் ஆண்டு முதல் 30ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்த மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த மம்மிகள் கண்டறியப்பட்ட இடங்கள், ஒரு பெரிய முதலாளியின் குடும்பத்தினர் மற்றும் அவர் வளர்த்த விலங்குகளுக்கான இடுகாடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதல் முறையாக, மனிதனின் மம்மியும், அருகே விலங்குகளும் மம்மியாக மாற்றப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது இந்த தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்திருப்பது எகிப்திய நாகரீகம் பற்றிய ஒரு புதிய தகவலைக் கொடுத்துள்ளது.

Share:

Author: theneeweb