பாரிசுநகருக்கு வந்த ஒரு பேனாபோராளி சொன்ன கதைகள்

துரைசிங்கம் – பிரான்ஸ்—-

 

பிரான்சில் முளைத்து பாரெல்லாம் தமிழ் பரப்பும் கோமகனின்  “நடு”  இணைய இதழின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று நடந்த இலக்கியச்சந்திப்பில் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதியநூல் சொல்லத்தவறிய கதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளருமான வாசுதேவன் தலைமையில் நடுஆசிரியர் கோமகனின் ஆரம்ப உரையுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. பாரிசு படைப்பாளிகள், இலக்கியஆர்வலர்கள் ஆர்வத்துடன் சபையை அலங்கரித்தனர்

எழுத்தாளர் முருகபூபதி ஊடகராக படைப்பாளியாக சமூக அக்கறையாளனாக புடம் போடப்பட்டவர். மேலும் மேலும் இவற்றில் துலங்கிவருபவர். 1972இல் ஆரம்பமான இவரது ஊடகப்பயணம் பலநெருக்கடிகள் ஆபத்துகளை தாண்டி பயணிக்கிறது. இலங்கையில் 1987 இற்கு முன்னர் யுத்தகாலத்தில் ஊடகர்கள் எதிர்கொண்ட அத்தனை பிச்சினைகளுக்கும் முகம்கொடுத்தவர். இதனை அவர் எழுத்தில் பலவடிவங்களில் பதிவு செய்திருந்தாலும் பாரிஸில் நிகழ்ந்த சந்திப்பில் நேரடியாக அவரது வாயிலிருந்து வார்த்தைகளாக அந்தக் கதைகளை உள்வாங்கி கொண்டோம்.

 

சிறுகதை, நாவல், கட்டுரை, இலக்கியமடல், புனைவுசா ரராத இலக்கியம், மொழிபெயர்ப்பு என இதுவரையில் இருபத்தியிரண்டு நூல்களை பிரசவித்துள்ளார் .

ஒரு குழந்தையை ஒருதாய் பிரசவிக்க பத்துமாதங்கள்ஆகும். ஆனால், இவரது இலக்கியபிரசவங்கள் சிலநிமிடங்களிலேயே நிகழ்ந்துவிடும். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் வலிகளை அனுபவிக்கும் தாயானவள் அடுத்த குழந்தை வேண்டாம் என் பளாம். படைப்புகளின் போது இவருக்கும் வலி, சுமைகள் இருந்தாலும் இவரதுபேனாஅடுத்த படைப்புக்கு தயாராகும். அதனால் இவரை ஒருபேனாபோராளிஎனவும்அடையாளம் காணலாம்.  வீரகேசரி  வார வெளியீட்டில் இலக்கிய பலகணி என்றபத்தி எழுத்தினை“ரஸஞானி”என்ற பெயரில்அன்று எழுதி வந்தார். அந்த எழுத்துகள்தான் அ வர் மீதான கவனிப்பை அன்றையகாலங்களில் எனக்குத் தந்தது.அவரை சந்திக்கின்றபோது ரஸஞானி பிறந்த கதையை அறிய வேண்டும் என்றிருந்தேன். இலங்கையில் இவரைக் கண்டேன், கதைத்தேன், பழகினேன் அதுமட்டும் அவரது மொழியில் மறந்த கதையாகி விட்டது.

பாரிஸ்சந்திப்பில் இவர் தனது அனுபவங்களை படைப்புகளை வாழ்வியலை பற்றி எல்லோருடனும் மனம்விட்டு பேசினார். 1987இல் கங்காரு நாட்டு சரணாலயத்தில் தஞ்சமடைந்த இந்த எழுத்துப் பறவையை புகலிடத்தில் சிறகுமுளைத்து பறக்கவைத்தது பிரான்சுமண் என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“ ஓசைமனோ, ஈழநாடு குகநாதன், தமிழன் காசிலிங்கம் ஆகியோரின் ஊடகங்களில் சிறகுவிரித்துபறந்தேன் என்றார். “பேப்பர் பேனாவைத் தவிர தனக்கு எதுவும் தெரியாது “ என்று வெளிப்படைத்தன்மையுடன் கூறிய இவர், “சமூகத்துக்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும் படைப்பாளிகளின்
பணி. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும்”என்றார். இதற்கு உதாரணபுருசராக இவரே செயற்படுகிறார். முன்மாதிரியாகிறார்.

 

பாரிசுநகருக்கு வந்த ஒரு பேனாபோராளி சொன்ன கதைகள்இலங்கையில் நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமாணவர்களின் வறுமைநிலையை உணர்ந்து அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார் .தனது நண்பர்களின் உதவியுடன் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துகிறார். 1988இல் அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி  நிதியம் என்ற தன்னார்வ தொண்டு நிறுனத்தை உருவாக்கி இலங்கையில் வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு உதவும் கல்வி பணியை தொடருகிறார் .இதுரையில்சுமார்மூவாயிரம்மாணவர்கள்இந்தத்திட்டத்தினால்பயனடைந்துள்ளனர்என்பதுதெரியவருகிறது. இவர்களில் நூறுக்கும் மேற்பட்டமாணவர்கள்
பல்கலைக்கழககல்வியையும் நிறைவுசெய்துள்ளனர். பலமாணவர்கள் அரசபணிகளில் இணைந்துள்ளனர்.

இந்தநிதியம் அவுஸ்திரேலியாவில்சட்டப்படி பதிவுசெய்யப்பட்டுள்ளது .இவ்வாறு முருகபூபதி கூறியபோது நாம் ஆச்சரியத்தில் மூழ்கினோம். மாணவபராயத்தில் வறுமையின் நிறம் சிவப்பு என்பதை உணர்ந்தமையினாலேயே புலம்பெயர்ந்த பின்னர்,  முருகபூபதி இந்தகல்வி மேம்பாட்டுபணியை முன்னெடுத்து வருகிறார்.

 

இவரது புதியநூல் சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுகம் செய்யப்பட்டபோது, எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான சி.புஸ்பராணிக் முதலாவதுபிரதி நூலாசிரியர் முருகபூபதியினால் வழங்கப்பட்டது. இலக்கியவாதிகள் வி.ரி.இளங்கோவன், ஓசைமனோ, ஊடகவியலாளர் செ. செல்வரத்தினம் ஆகியோர் உட்பட  லர்பிரதிகளை பெற்றுக்கொண்டபின்னர், தத்தமது கருத்துகளை கூறினார்கள்.

தமிழகம், இலங்கை, புகலிடம் முதலான தளங்களில் சமகால இலக்கியம் குறித்த உரையாடலும் இடம்பெற்றது. முருபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும்

ரஸஞானி ஆவணப்படத்தையும் இந்த இலக்கியசந்திப்பில் பார்வையாளருக்கு காண்பித்திருந்தால், முருகபூபதியை மேலும் அறிந்து கொள்ளவாய்ப்பு இருந்திருக்கும்.

எனினும் இச்சந்திப்புக்கு முதல்நாள் மற்றும் ஒருநண்பர்கள் வட்டத்தில்நான் அந்த ஆவணப்படத்தை பார்த்தபோது முருகபூபதியின் பன்முக செயற்பாட்டையும் புரிந்து கொண்டேன்.

தமிழ், சிங்கள, முஸ்லிம்மக்களுடன் அவருக்குள்ள உறவும் தொடர்பும் ஆழமானது. எல்லோருடனும் நட்பைபேணியவர். எவரையும் காயப்படுத்தாத வார்த்தைகளின் சொந்தக்காரன்.  எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருப்பவர். அதனால்தான் “முருகபூபதி ஒருரோபோ“என்று அவரதுமனைவி ரஸஞானிஆவணப்படத்தில் கூறியுள்ளார்.


“ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் நிமிர்வுடன் நிற்பார்கள் என்பதை பாரிஸ் லாசப்பலுக்குவரும் எவரும் புரிந்து கொள்வார்கள் “என்பதை அவர் பூடகமாகவும் தெரிவித்தார். இங்குள்ள தமிழரின் நிமிர்வையும் திமிரையும் கண்டு வியந்தார். “பிரான்சிலுள்ள தமிழரின் சமூக பொருளாதார வாழ்வியல் ஆய்வு செய்யப் படவேண்டும். அதற்காக யாராவது தேடலில் ஈடுபடவேண்டும்.“ எனவும்அடுத்த  சந்ததியிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும் அதற்கான ஊக்குவிப்புகளை தொடங்கவேண்டும் எனவும் முருகபூபதி தனது உரையில் வலியுறுத்தினார்.

 

Share:

Author: theneeweb