இலங்கை அகதிகளுடனான படகு ஒன்றை ஆபிரிக்க தீவான ரீயூனியனின் அதிகாரிகள் கைப்பற்றினர்

சுமார் 70 சந்தேகத்துக்குரிய இலங்கை அகதிகளுடனான படகு ஒன்றை ஃப்ரான்ஸின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஆபிரிக்க தீவான ரீயூனியனின் அதிகாரிகள் இடைமறித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த படகு ரீயூனியன் தீவில்இருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் இருந்து அனைவரும் இலங்கையர்கள் என்று ரீயூனியன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறார்கள் மற்றும் பெண்களும் அவர்களில் உள்ளடங்குகின்றனர்.

Share:

Author: theneeweb