அடுக்குமாடி குடியிருப்பில் தீ: பிரான்ஸில் 10 பேர் பலி! 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
பாரீஸ் நகரில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் ரூ எர்லாங்கர் பகுதியில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி கட்டடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. 8 தளங்களைக் கொண்ட அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு அந்தக் கட்டடத்தில் தீப்பற்றியதாகவும், சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb