கோணாவில் பாடசாலை மாணவனுக்கு பொலீஸ் பாதுகாப்பு – பிரதி பொலீஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன

கோணாவில் பாடசாலை மாணவனின் பாதுகாப்பு கருதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் பொலீஸ் சுற்றுக்காவல் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி முல்லைத்தீ மாவட்டங்களின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனைபற்றி பொலீஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம்(06) வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசாவின் ஏற்பாட்டில் குறித்த மாணவனின் தந்தை வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தனது மகனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீ மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மகிந்த குணரட்னவை தொடர்புகொண்டு கலந்துரையாடியதோடு, மாணவனின் தந்தையை பிரதி பொலீஸ் மா அதிபரை சந்திப்பதற்கு அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மாணவனின் தந்தையுடன் உரிய பொலீஸ் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி கிளிநொச்சி முல்லைத்தீ மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மகிந்த குணரட்ன தமக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளில் ஒன்றுக்கு மூன்று பெண்களை கைது செய்யது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்த அவர்

பாடசாலை அதிபருடன் மாணவனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாட இருப்பதாகவும், சில வாரங்களுக்கு கோணாவில் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவுறும் போதும் பொலீஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோடு, மாணவனின் பெற்றொர் எவ்வேளையும் தங்களோடு தொடர்பு கொள்வற்குரிய ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாணவனின் பாதுகாப்பு விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்ட கிளிநொச்சி முல்லைத்தீ மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மகிந்த குணரட்ன அவர்களுக்கு பெற்றோர் தங்களின் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb