எவ்வித எதிர்ப்பு வந்தாலும் 2 மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும்

எவ்வித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போதைப்பொருள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ கொலை முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாரித்துள்ள அறிக்கையை 2 வாரங்களுக்குள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb