மதூஷ் கைது செய்யப்பட்டதை டுபாய் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை

டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்டவர்களை நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் பொறுப்பேற்பது சம்பந்தமாக டுபாய் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

மாகந்துர மதூஷ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் டுபாய் உத்தியோபூர்வமாக தமது நாட்டுக்கு இதுவரை அறிவிக்கவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினர் டுபாய் மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமால் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் நாட்டிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக ர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb