கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலைக்கு முன்னால் இரு பேருந்துகளில் சிக்கி உடல் சிதறி பலியான இளைஞர்

கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றிலும், தனியார் பேருந்து ஒன்றிலும் சிக்கி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் பின்னர் படுகாயமடைந்திருந்த அவர் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதான குறித்த இளைஞர், வீதியின் மறுபுறத்திற்கு செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மெனிக்கின்ன பகுதியை சேர்ந்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், பேருந்துகளின் சாரதிகளை காவல்துறை கைது செய்துள்ளது.

Share:

Author: theneeweb