பாராளுமன்ற உறுப்பினரின் அறிவித்தலுக்கமைவாகவே அவரின்படம் மறைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்தில் நான்கு மில்லியன் ரூபா செலவில் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 03-02-2019 அன்று இடம்பெற்றது.

இதன் போது விபரங்கள் அடங்கியதாக குறித்த அபிவிருத்தி திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவாலயத்தின் முன்பாக ஏ9 பிரதான வீதியில் அமைச்சர் சஜித் பிறேமதாசா அவர்களின் படத்தை பெரிதாகவும், அதன் மேற்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் படங்களுடன் கட்டவுட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று முன்தினம் 06-02-2019 குறித்த கட்டவுட்டில் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களின் படம் தீடிரென ஸ்ரிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது

குறித்த கட்டவுட்டில் காணப்பட்ட தனது படத்தை மறைத்துவிடுமாறும், அரசின் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் தனது படத்தை போட்டு விளம்பரங்களை காட்சியப்படுத்த வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் அறிவித்தமைக்கு அமைவாக தாம் அவரின் படத்தை மறைத்து விட்டதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb